What's new‎ > ‎

நீங்காத நினைவுகளுடன் முதலாமாண்டு நினைவஞ்சலி

posted Jan 29, 2011, 9:31 AM by Suranuthan Sothiswaran
                                                          

அமரர் சிவநிதி சஜாந்த்

           
    கண்ணின் மணியே, சஜாந்தே எங்கள்
     உயிரே உனை யெப்போ இனிக்காண்போம்
    மண்ணில் பிறந்து மழலையும் பேசி
    மனதில் பதிந்த மரகதமே மறவோமே
    எண்ணில் துயரம் அடங்காது ஏறுதையா  
    ஏனிந்தச் சோதனையை இறைவன் தந்தான்
    விண்ணில் நீ விளையாட விமலனும் நினைத்தாரோ
    வேண்டுதலும் பொய்த்ததால் வேதனையில் துடிக்கிறோம்

    பூசைக்கு ப+ப்பறித்து புத்தூக்கம் தந்தாயே
    பொங்கும் தமிழினில் புகழுரை செய்தாயே
    ஓசைக்கு செவிசாய்த்து உள்ளம் மகிழ்வாயே
    உறவுக்குப் பாலமாய் ஓடித்திரிவாயே
    தூசைத் துடைத்து துப்பரவும் செய்வாயே
    துங்காது விழித்திருந்து துயரம் களைவாயே
    ஆசைக்கு வித்திட்டு அன்பினைப்பொழிந்த
    அருமை மகனை அண்ணலே காப்பாய்.
 
       ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம்


தகவல் - குடும்பத்தினர்
        ;           

Comments