What's new‎ > ‎

நிலைய இரவு - 2012, நேரு சனசமூக நிலையம், காரைதீவு

posted Jan 2, 2013, 10:31 PM by Thineskanth Ponnampalam   [ updated Jan 2, 2013, 11:08 PM ]
நேரு சனசமூக நிலையத்தின் கழக இரவானது 30.12.2012 ம் திகதி மாலை 6.30 மணிக்கு நிலையக் கேட்போர்கூடத்தில் அதன் தலைவர். திரு. நாகராசா (செயலாளர், பிரதேச சபை, காரைதீவு) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 
பிரதம விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திரு.ஆர். ஜெகராஜன் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் திரு. செ. இராசையா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக திரு. சண்முகம் மற்றும் திரு.கோவிந்தன் ஆகியோரும் மற்றும் சனசமூக நிலையத்தின் போசகர்கள், நிருவாகத்தினர், அங்கத்தவர்கள், புதிய அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளுக்கான கௌரவம் இச்சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது. நிலையத்தின் செயற்பாடுகளைத் திறம்படச் செய்த திரு.வை.கிருஸ்ணமோகன் அவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்பட்டது.
2013ம் ஆண்டிற்கான புதிய நிருவாக சபையினரும் தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் - திரு. மு. ரமணீதரன்
செயலாளர் - திரு. வை. கிருஸணமோகன்
பொருளாளர் - திரு. க. வினோதரன்
கணக்காய்வாளர் - திரு.மு. ரகுநந்தன்  மற்றும் நிருவாகத்தினரும் தெரிவாகினர்.


PicasaWeb Slideshow



                Info & Photos:- Mr.M.Ramaneetharan
Comments