What's new‎ > ‎

நேரு சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச முன்னோடிப் பரீட்சையும், கருத்தரங்கும் – 2012

posted Aug 20, 2012, 8:32 AM by Sulecshan Logaraju   [ updated Aug 20, 2012, 8:40 AM ]
நேரு சனசமூக நிலையத்தினரால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற தரம் 05 மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார் செய்வதற்கான இலவசக் கருத்தரங்கினை 2012.08.19ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கமு/ சண்முகா மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நிலையத்தின் தலைவர் திரு. நாகராசா (செயலாளர், பிரதேச சபை) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் திரு. ஆர். ரகுபதி, நிலையச் செயலாளர் திரு. இந்திரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இக் கருத்தரங்கிற்கான வளவாளராக மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் திரு. ஜே. ஜெயக்காந்தன் M.Ed. அவர்கள் செயற்பட்டு மாணவர்களை அறிவூட்டி பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் முறைகளையும், எதிர்பார்க்கப்படுகின்ற வினாக்கள் அடங்கிய செயற்பாடுகளையும் விளக்கினார்.
பின்னர் நடாத்தப்பட்ட மாதிரிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பரிசில்களும் வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
info:-M.Ramaneetharan

 

Comments