What's new‎ > ‎

நாடகமும் அரங்கியலும் பாட செயன்முறைப் பயிற்சிப் பாசறை - 2012

posted Oct 7, 2012, 10:28 AM by Suranuthan Sothiswaran

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம் முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பாட ,செயன்முறைப் பரீட்சையை எமது பிரதேச மாணவர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கில் '' நாடகமும் அரங்கியலும் பாட செயன்முறைப் பயிற்சிப் பாசறை' ஒன்று முற்றிலும் இலவசமாக  விபுலாநந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 06.10.2012 தொடக்கம் 07.10.2012 வரை முழு நேர பயிற்சியாக நடைபெற்றது. 
இப் பயிற்சிப் பாசறைக்கு 75 சதவீதமான மாணவர்கள் அக்கரைப்பற்று , சம்மாந்துறை , கல்முனை , நாவிதன்வெளி, திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப் பயிற்சிப் பாசறையின் இறுதியில் மாணவர்கள் கூறுகையில் , பாடசாலைகளில் இவ்வாறாக நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான செயன்முறைப் பயிற்சிகளோ கற்பித்தல் முறையோ போதியளவு நடைபெறவதில்லை எனவும் இப் பாசறை மூலம் பல்வேறு நாடன முறைகளை அறிய முடிந்ததோடு கூத்து முறை பற்றியும் போதியளவு பயிற்சியைப் பெற முடிந்தது எனவும் தெரிவித்தனர். 

இப் பயிற்சிப் பாசறையானது சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கை நிறுவனம் - கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் எமது ஒன்றிய உறுப்பினர்களைக் கொண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்


info : 
S.Kajendran
Secretary 
UNDERGRADUATES SOCIAL SERVICE ASSOCIATION 
KARAITIVU
Comments