What's new‎ > ‎

நன்றி நவிலல் - காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம்

posted Sep 10, 2011, 1:54 AM by Suranuthan Sothiswaran
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்குக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்கி கல்விக்கான எமது சமூக சேவையில் பங்கு கொண்ட பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பட்டதாரி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும்  எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

                   அத்துடன் எமது இலவசக் கல்விக் கருத்தரங்கை திறன்பட செய்ய தமது பங்களிப்பை வழங்கிய காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ. செல்லையா இராசையா அவர்களுக்கும்  மேலும் கருத்தரங்கின் போது எமது அழைப்பை ஏற்று வருகை  தந்து பலஆலோனைகளும் வழங்கி உரையாற்றிச் சென்ற எமது ஒன்றிய ஸ்தாபகரும்,  போசகரும்,  தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான K.கணேசராஜா அவர்களுக்கும் எமது ஒன்றியம் சார்பாக  நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.




பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம்
காரைதீவு


தகவல் :   S. கஜேந்திரன்
Comments