What's new‎ > ‎

நன்றி நவிலல்

posted Jul 24, 2011, 3:47 AM by Web Team

எமது இணையத்தளமானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எமது உறுப்பினர்களின் நிதி மற்றும் உபகரண பங்களிப்பின் மூலமே எமது இணையத்தளத்தின் எல்லாவிதமான செயற்பாடுகளும் இடம்பெற்று வந்தன.

அவ்வாறிருந்த போது, எம்மை ஊக்குவிக்கும் முகமாக, பெறுமதிவாய்ந்த வீடியோ கமரா ஒன்றை அன்பளிப்பு செய்த திரு.தியாகராஜா கமல்ராஜ் (London) அவர்களுக்கும், அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 

உங்களது karaitivu.org க்கான இந்த பரிசானது, எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும், எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இணைய குழு
Comments