What's new‎ > ‎

நாம் நடக்கையில்...

posted Apr 29, 2010, 1:09 AM by Prasath Mendis Appu   [ updated Apr 29, 2010, 1:17 AM ]


அந்திசாயும் நேரத்தில்
யாரும் இல்லா தெரு ஓரதில்
உன் கை விரல்களை பிடித்துக்கொண்டு
நாம் நடக்கையில்...
 
மெல்ல வீசும் தென்றல் உன் கூந்தலை கலைத்திருக்க
அதை உன் கைவிரல் சரிசெய்திருக்க...
 
என் தோள் மீது நீ முகம் சாய்த்து சில வார்த்தை மொழிந்திருக்க
அதை நான் கவிதை என ரசித்திருக்க...
 
சாலை ஓர வண்ணப்பூக்கள் பூத்திருக்க
அவைகளுக்கு போட்டியாய் உன் முகம் மலர்ந்திருக்க...
 
ஜோடிக்கிளிகள் மரக்கிளையில் அமர்ந்து காதல் செய்திருக்க
அவைகளுக்கு எதிராய் நீயும் நானும் காதல் செய்ய...
 
அந்த அந்திப்பொழுது முடிவில்லாமல் செல்ல
அதை எண்ணியே என் அனைத்து அந்திப்பொழுதும் செல்கின்றன....
 
                                                                              Nithar S.

- தகவல் Pareraj Logajeyasundaram
Comments