What's new‎ > ‎

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 64 வது நினைவு தினம்

posted Jul 18, 2011, 12:40 PM by Suranuthan Sothiswaran
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 64 வது நினைவு தினம்

மனமகிழ                         மனநெகிழ
 1892.03.27                             1947.07.19           

 
வந்தாரை வாழ வைக்கும் காரேறு தீவிலே
கடல் சூழ் இலங்கை கயபாகு – தன்
வழியேறு மன்னர் தாம் அமைத்த
கண்ணகியார் கோயில் அருகில்
சங்கத் தமிழோசையொன்று கேட்டது
பங்குனி இருபததேழில்;………….

சங்கத் தமிழ் வளர்த்த – நல்லறிஞர்
சாமிநாதையருடன் - பாரெங்கும்
பரஞ்சோதி போல் ஒளிவீசி
பலநூறு கதை பேசி நின்ற
முத்தமிழ் அன்னல்…கண்ணம்மை கரு
மயில்வாகனன்……………….

 

சித்திரா பௌர்ணமி துறவில்
விபுலாநந்தர் நாமம் பூண்ட – வித்தகன்
அடி இணைக்கு நிகரான அடி உளதோ
உத்தமனார் உயிர் நீரப்;பினும் - அவர் தம்
அடியிணைக்கு நிகரான தமிழ் பணி – என்றும்
அழியாதென்பது உறுதி………….

 
பல்கலைக்கழக மாணவர் சமூகசேவை ஒன்றியம்
காரைதீவு

Comments