What's new‎ > ‎

முத்தமிழ் வித்தகன் விபுலாநந்தர் பிறந்த மண்ணில் இசை நடன கலைகளை வளர்ப்பதற்கு மாணவர்கள் இருந்த போதிலும் போதியளவு வளம் இல்லாமை கவலைக்குரிய விடையமே…

posted Nov 8, 2011, 7:03 AM by Suranuthan Sothiswaran   [ updated Nov 8, 2011, 7:11 AM ]

                         நேற்று(06.11.2011) காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றிய மாணவர்களால் இம் முறை பல்கலைக்கழக அனுமதி பெற்ற புது முக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் , பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றிய அறிவகத்தில் கணினிப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியான மு.கணேசராஜா (சிரேஸ்ட விரிவுரையானர் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) உட்பட காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செ.இராசையா, காரைதீவு உதவி பிரதேச செயலாளர் சி. ஜெகராஜன் மற்றும் ஒன்றிய சிரேஸ்ர உறுப்கினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
                                இவ் வைபவத்தின் போது விபுலாநந்த இசை நடனக் கல்லூரி மாணவ மாணவிகளால் நடனம், நாடகம்(மௌனங்கள் மொழியானால் ) உட்பட இசை நிகழ்ச்சிகளுனும் இட்பெற்றன. இவை பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.
                                இவ் வைபவத்தின் பொது பல்கலைக் கழக மாணவர் சமூக சேவை ஒன்றிய தலைவர்,செயலாளர்களால் காரைதீவுப் பிரதேசத்தில் காணப்படும் கல்வி ரீதியான பல்வேறு பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டன . அவற்றில், முத்தமிழ் வித்தகன் விபுலானந்தர் பிறந்த மண்ணில் தமிழ் பண்பாட்டிற்குரிய கலைகளை வளர்ப்பதற்கு மாணவர்கள்( பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றிய உறுப்பினர்களில் சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரியில்(கிழக்குப் பல்கலைக்கழகம்) கல்வி பயிலும் மாணவர்கள்) ஆர்வத்துடன் உள்ள போதிலும் அதற்கான போதிய இசைக் கருவிகள் இல்லாமை பெரும் வருத்தத்திற்குரிய விடையமாகும்.
 
 அத்துடன் 15 வருடங்களுக்கு மேலாக இவ்வொன்றியமானது சொந்தமான கட்டடிடம் இல்லாமல் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது
“இயல் இசை நாடகம் என முத்தழிழ்  வளர்த்த வித்தகன் மண்ணில் கலை வளர்க்க கரங் கொடுப்பீர் அன்பர்களே”
 



பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம்
காரைதீவு
Comments