What's new‎ > ‎

மோகன் கணேஷ் மென்பந்து சுற்றுப்போட்டி 2010

posted May 30, 2010, 10:59 AM by Web Team   [ updated May 31, 2010, 1:43 PM by Suranuthan Sothiswaran ]
அமரர்களானசபாபதி மோகனராசா (சின்னமோகன்) மற்றும் முத்துலிங்கம் கணேசகுமார் (ராசிக்) ஞாபகார்த்தமாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்க்கிராமங்களில் கிறிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கு முகமாகவும் அன்னார்களின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கிண்ணத்தின் இறுதிப் போட்டி கடந்த 29.05.2010 சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்த இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று பவர் விளையாட்டுக்கழகமானது நீலாவணை கோல்டன்  விளையாட்டுக்கழகத்தினை 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்து கிண்ணத்தைசுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியின் சிறப்பாட்டக்காரர், போட்டி;தொடரின் சிறப்பாட்டக்காரர் சிறந்த துடுப்பட்டம் சிறந்த பந்து வீச்சு மற்றும் சிறந்த அறிவிப்பாளர் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


Comments