What's new‎ > ‎

மோகன் - கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட்போட்டி

posted Jun 29, 2012, 10:43 AM by Suranuthan Sothiswaran

அமரர்களான மோகன் - கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட்போட்டியின் முதலாவது போட்டியில் கண்ணகி விளையாட்டுக் கழக அணியினர் 09 ஓட்டங்களால் ஜொலி கிங்ஸ்வி ளையாட்டுக் கழக அணியிரை வெற்றிகொண்டனர். நாணையச் சுழற்சியில் வெற்றிபெற்ற கண்ணகி விளையாட்டுக்கழக அணியினர் 105 (18 ஓவர்கள்) ஓட்டங்ளைப்பெற்றனர். (டினஸ்ரன் 23, புஸ்பா 11, ரமணி 10, பார்த்தீபன் 10, பந்துவீச்சில் ரஜீவன் 3/15, டினேஸ் 2/6, மகிந்தன் 2/14). பதிலுக்குத்  துடுப்பெடுத்தாடிய ஜொலி கிங்ஸ் அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்ளைப் பெற்றது. (ஆதர்சன் 20, குகசாந் 16, மகிந்தன் 10, பந்துவீச்சில்நோயல் 4/11, சுதன் 2/16, ரமணி /24)     


Information :Mr.M.Ramaneetharan

Comments