What's new‎ > ‎

மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 2012

posted Jun 28, 2012, 8:50 AM by Sulecshan Logaraju   [ updated Jun 28, 2012, 8:57 AM ]
                                                                                                      

 

அமரத்துவடைந்த சபாபதி மோகனராசா, முத்துலிங்கம் கணேசகுமார் ஆகியோர்களது நினைவாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள 20 – 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கட் போட்டியானது எதிர்வரும் 29.06.2012ம் திகதி முதல் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது.

கரைதீவுப் பிதேசத்தில் கடினபந்துத் துறையில் பங்குகொள்ளும் அனைத்து விளையாட்டுக் கழகங்களையும் உள்ளடக்கியதாக இச் சுற்றுப்போட்டிகள் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்

1.            காரைதீவு விளையாட்டுக் கழகம்

2.            காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம்

3.            ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம்

4.            கண்ணகி விளையாட்டுக் கழகம்

என்பன இச் சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்றன.

காரைதீவுப் பிரதேசத்தில் கடினபந்துத் துறையினை மேம்படுத்தவும்இ சிறந்த வீர்ர்ளை உருவாக்கவும், வீர்ர்களின் திமையினை வௌகொணர்வதும் இச் சுற்றுப்போட்டியின் நோக்கம் என இப்போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

சென்ற பல வருடங்களாக மாவட்டரீதியாக தமிழ் பிதேசங்களில் உள்ள மென்பந்து கிரிக்கட் விளையாட்டுக் கழகங்ளை உள்ளடக்கி இச் சுற்றுப்போட்டிகளை நடாத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.


info:-Muthulingam Ramaneetharan
Comments