What's new‎ > ‎

மரண அறிவித்தல் - அமரர் வடிவேல் சிவேஸ்வரன்

posted Aug 19, 2010, 5:27 AM by Web Team   [ updated Aug 19, 2010, 6:09 AM ]

காரைதீவு 2ம் பிரிவைச் சேர்ந்த வடிவேல் சிவேஸ்வரன் (கணக்காய்வு உத்தியோகத்தர்) அவர்கள் 18-08-2010 அன்று இறைபதம் எய்தினார். அன்னார் காலம்சென்ற வடிவேல், மற்றும் காலம்சென்ற வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்ற தியாகராசா, மற்றும் கதிர்மணி தம்பதியினரின் மருமகனும், தியாகமணி (ஆங்கில ஆசிரியை கண்ணகி இந்து வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவனும், சிவாணி, கெளரிசோபனன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவலெட்சுமி, சிவகுமாரி, தங்கவேல் (கூட்டுறவு பரிசோதகர்) ஆகியோரின் அன்பு சகோதரரும், சிறிதேவி (அவுஸ்திரேலியா), காலம்சென்ற திவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் 20-08-2010 அதாவது நாளை காலை ஒன்பது மணிக்கு காரைதீவு பொது மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
குடும்பத்தினர்
Comments