What's new‎ > ‎

மரண அறிவித்தல்

posted Mar 15, 2010, 6:33 AM by Prasath Mendis Appu
உதயம்
30 - 10 - 1927



அஸ்தமனம்
13 - 03 - 2010


 
அமரர். பார்வதி அரசரெட்ணம்

அன்பும் அறனும் உடைத்தான பண்புக் குவலயத்தில்
சீர்பெற்ற காசுநாதன்பிள்ளை அரசரெட்ணத்தை  கரம்பற்றி
பேரான நால்வரை பெற்றெடுத்து மகிழ்வுகண்டவேளை
பாரினை விட்டு நீங்கிட முனைந்தீரே.

இன்ப துன்பங்களில் பங்கெடுத்து பக்கதுணையாய் நின்ற
அன்பு மகன்மார் மகேந்திரன் (அவுஸ்ரேலியா), பிரணவேந்திரன் (அவுஸ்ரேலியா)
காலஞ்சென்ற ஞானேந்திரன், புவனேந்திரன் (லண்டன்)
பண்பில் இணையில்லா பெறாமக்கள் கோமதி, கணேசரெட்ணம், பாலச்சந்திரன்,
தவசோதி, நீங்கி நற்கதி எய்திட சென்றீரே.

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவரே
உற்ற பிள்ளைகளை இறுதிவரை ஓயாது அழைத்தவரே
அல்லவரையும் அரவணைத்து உறவு கொண்டாடி
நல்லவளாக நற்கதி எய்திட சென்றீரே.

சார்ந்து நிற்கும் சோதரர்கள் தாங்காது தவிக்க
சோர்ந்து போன மருமக்கள் மனதிற்குள் புழுங்கிட
பார்த்து மகிழ்ந்த சொந்தம் பரிதவித்து அழ
பேரான வாழ்வு தேடி பிரிந்து சென்றீரே.

துயருறும் மருமக்கள் புஸ்பலதா, துசிதா, காலஞ்சென்ற அங்கயற்கண்ணி
பிரேமலதா, சந்திரவசந்தி, விஜயாம்பிகை, வரதராஜன், தெய்வேந்திரராஜா, சவுந்தரராஜா
பேரப்பிள்ளைகள் அஞ்சுமன், நிருஷா, பாஷாவரதன்,  தர்ணேஸ், பிரகர்ஷிதா, ரக்ஜி
திசிகன், காலஞ்சென்ற நிதர்சன், பிரசாத், கீர்த்தனா, ரதீசன், திவ்யா, ராகுலன்
உற்றார் உறவினர்கள் அனைவரும் கண்ணீர் மல்க
நிலையற்ற வாழ்வினை நிறைவுளதாக்கி நிமலனடி
சேர்ந்தாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

குடும்பத்தினர்
Comments