What's new‎ > ‎

மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி - 2010

posted May 15, 2010, 7:30 PM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ JALU விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியானது எதிர்வரும் 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை காரைதீவூ கனகரெத்தினம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவூள்ளது. 

அமரர்களான சபாபதி மோகனராசா (சின்னமோகன்) மற்றும் முத்துலிங்கம் கணேசகுமார் (ராசிக்) ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் அம்பாரை மாவட்டத்தின் காரைதீவூ, கல்முனை, கல்லாறு, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்துகின்ற முன்னணித் தமிழ் விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றவூள்ளன. 

வெற்றிபெறும் விளையாட்டுக் கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள்,பணப்பரிசில்கள் ஆகியன வழங்கப்படவூள்ளன. வருடாவருடம் நடாத்தப்படுகின்ற இச்சுற்றுப்போட்டியினை இம்முறையூம் JALU விளையாட்டுக்கழகம் முன்னின்று நடாத்துகின்றது. இதன் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 29.05.2010 அன்று நடைபெறும் என கழகச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார். 
இப் போட்டிகளுக்கான சகல அனுசரணைகளையூம் திரு. எஸ். விவேகானந்தராசா (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்) மற்றும் எம். வரதராசன் ( புள்ளிவிபர உத்தியோகத்தர்) ஆகியோர் வழங்குகின்றனர். இச்சுற்றுப்போட்டியின் பிரதான நோக்கம் “ அம்பாரை மாவட்ட தமிழ் விளையாட்டுக் கழகங்களின் கிரிக்கட்  விளையாட்டினை ஊக்குவிப்பதும்,அதன் தரத்தினை மேம்படுத்துவமே” என அனுசரணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.



Thanks - Mr.Muthulingam Ramaneetharan
Comments