What's new‎ > ‎

மனித உரிமை டிப்ளோமா கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

posted Feb 14, 2010, 12:40 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 14, 2010, 12:53 AM ]
அந்த வகையில் மனித உரிமை சான்றிதழ் கற்கை நெறி, டிப்ளோமா கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 14.02.2010 ஞாயிற்றுக்கிழமை இன்று உவெஸ்லி CHRISTA இல்லம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்த  39 சான்றிதழ் கற்கை நெறி பயிலுனர்களுக்கும், 13 டிப்ளோமா கற்கை நெறி பயிலுனர்களுக்குமாக 52 பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.    மனித அபிவிருத்தி தாபன தலைவர், திரு. பி.பி. சிவபிரகாசம் அவர்களின் தலைமை நடைபெற்ற  இந்நிகழ்வில் பின்வருவேர் அதிதிகளாக கலந்து சிறப்பித்து சான்றிதழ்களையும்  வழங்கினர்

முதன்மை அதிதி
ஜனாப் என்.எம்.எம். அப்துல்லா (நீதிபதி, மாவட்ட நீதி மன்றம், கல்முனை)
கௌரவ அதிதிகள்
திரு. வஸ்றின் பில்லன் (பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி)
ஜனாப் எம்.எம். சறூக் (பிராந்திய இணைப்பாளர், மனித உரிமை ஆணைக்குழு, கல்முனை)
ஏனைய அதிதிகள்
ஜனாப் ஏ.சி.ஏ. அஸீஸ் (பிராந்திய இணைப்பாளர், மனித உரிமை ஆணைக்குழு, கல்முனை)
ஜனாப் ஏ. உதுமாலெப்வை ( சிரேஸ்ட உத்தியோகஸ்தர், சிறுவர் நன்னடத்தை பிரிவு, கல்முனை)
 
Comments