What's new‎ > ‎

மலேரியா நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு

posted Jan 12, 2013, 9:54 AM by Suranuthan Sothiswaran   [ updated Jan 12, 2013, 10:00 AM ]
சுகாதார அமைச்சும் சர்வோதய இயக் கமும் இணைந்து அமுல்படுத்தும் GFATMதிட்டத்தின் ஒரு அம்சமான மலேரியா நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கான மக்கள் ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின்கீழ் அம்பாரை கரையோரப்பிரதேசங்களளைச்சேர்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது கடந்த 2013.01.13ம் திகதி கல்முனை சர்வோதய கிளைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

 கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஜனாப்.எஸ்.எல்.எம்.நபார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்  மலேரியா  நோய்த்தடுப்புப்பிரிவுக்கான   கல்முனைப்பிராந்திய மருத்துவ அதிகாரி டாக்டர். எம்.ரீ.எம். மர்சூக் அவர்கள் பிரதம வளவாளராகக் கலந்து விளக்கமளித்தார்.

இதன்போது எமது பிராந்தியத்தில் மலேரியா நோய் அபாயம் இல்லை எனினும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களாலும்,சென்றுவருபவர்களாலும் இந்தநோய் மீண்டும் காவி வரப்படாலம் என தெரிவித்தார். மேலும் தற்போது இந்த நோய் பற்ற பலரும் சிந்திப்பதில்லை எனவும் காய்ச்சல் ஏற்படும்போது வைத்தியசாலைகளிலுள்ள மலேரியா தடுப்புப்பிரிவுகளில் இரத்தப்பரிசோதனை செய்து இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை அறிந்து உயிராபத்து ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்



Comments