What's new‎ > ‎

மக்கள் தொடர்பாடல் மற்றும் ஊடக அமைச்சின்கீழ் எமது இணையத்தளம் பதிவு

posted Jan 17, 2012, 9:57 AM by Suranuthan Sothiswaran   [ updated Jan 18, 2012, 9:19 AM ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஊடக சட்டதிட்டங்களின் கீழ் இணையத்தளங்களை பதிவூசெய்யூம் நடைமுறையின் அடிப்படையில்  27 இணையத்தளங்களுக்கு பதிவுச்சான்றிதழ்கள் கடந்த 13.01.2012 நாரகன்பிட்டியில் அமைந்துள்ள மக்கள் தொடர்பாடல் மற்றும் ஊடக அமைச்சிலே அண்மையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் தொடர்பாடல் மற்றும் ஊடக அமைச்சர் கௌரவ.கெஹலிய ரம்புக்வெல்ல அவர்கள் கலந்து கொண்டார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ஊடகம் என்பது மக்களிடத்திலே நல்ல தகவல்களையூம் செய்திகளையூம் சுகந்திரமாக சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும் அதற்கு உங்களுக்கு இந்த பதிவூ சான்றிதழ் ஒரு சட்ட வரம்பை உங்களுக்கு கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் செயற்படுகின்ற போது உங்கள் ஊடகம் ஒரு மதிக்கத்தக்க ஊடகம் விழுமியங்களை உடைய ஊடகமாக மக்களிடத்தில் கருதப்படும்.அப்பொழுது நீங்கள் மக்களிடத்திலே சிறந்த ஒரு ஊடகம் என்ற பெருமையை பெறுவீர்கள்.அத்தோடு சிறந்த ஊடக விழுமியங்களை உடைய ஊடகவியலாளர்களாகவூம் கருதப்படுவீர்கள்.அப்போது நமது நாட்டின் ஊடகத்துறை சர்வதேச ரீதியில் ஒரு நன்மதிப்பை பெறும் அதை விடுத்து நாட்டை காட்டிக்கொடுக்கும் நம்பிக்கை துரோகிகளாக ஒரு போதும் நாம் இருக்கக்கூடாது.எனவே எங்களோடு கை கோர்த்து சிறந்த சேவையை இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் நீங்கள் வழங்க வேண்டும் என்றார்.மேலும் இன் நிகழ்விலே அமைச்சின் கௌரவ செயலர்.கணேகல உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எனவே எமது இணையத்தளமும் ஊடகமாக அங்கீகரிக்கப்பட்டதையிட்டு நாங்களும் காரைதீவூ மக்களும் பெருமையடைகின்றோம்

இந்த நிகழ்வின்போது இணைக்குழு சார்பாக கலந்துகொண்ட சிரேஷ்ட இணையக்குழு  உறுப்பினர் திரு.தி.லாவண்ணியன் கௌரவ ஊடக அமைச்சரிடமிருந்து சான்றிதழை பெறுவதையும் அமைச்சின் செயலாளருடன் உரையடுவதனையும் படத்தில் காணலாம். இந்தவேளையில் இவ்விணையத்தளம் பதிவுசெய்யப்படுவதற்கு ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக அமைச்சில் செயற்பாடுகளை மேற்கோண்ட திரு.தி.லாவண்ணியன் மற்றும் திரு.ந.அகிலன் ஆகியோருக்கும் . எம்முடன் என்றும் இருக்கும் காரைதீவு உறவுகளுக்கும் காரைதீவு.ஓர்க் இணையக்குழு நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றது.












Comments