What's new‎ > ‎

கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை கலாச்சார போட்டி நிகழ்சியொன்றில் காரைதீவூ காளி கலா மன்றத்தின் கலைஞர்கள் முதலிடம்

posted Dec 7, 2010, 7:40 PM by Lavanyan Thiruchelvam
கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை கலாச்சார போட்டி நிகழ்சியொன்றில் காரைதீவூ காளி கலா மன்றத்தின் கலைஞர்களான திரு.பாக்கியராஜா திரு.ஜெயசுந்தரம் ஜேடியின் "கப்பலேறிய மாப்பிள்ளை" எனும் கூத்து முதலிடம் பெற்றதுடன் திரு.கோபாலன் திரு.சிதம்பரப்பிள்ளை ஜேடியின் "அரிச்சந்திர மயான காண்டம்" கூத்து 2ம் இடத்தை பெற்றுக்கொண்டது.இவ் இரண்டு கூத்துக்களின் கதை வசனம் திரு.எஸ்.இராமநாதன்(தலைவர் காளி கலா மன்றம்) என்பதுடன் காரைதீவின் பாரம்பரிய கலை நிகழ்சிகளை செய்துவரும் இக் கலைஞர் குழாத்தின் இவ் வெற்றி அவர்களுடைய கலை ஆற்றலை மாகாண மட்டத்திலும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. இதனை தொடர்ந்து தெகியத்தகண்டியவில் நடைபெறவூள்ள அடுத்த கட்ட போட்டிகளிலும் இக் கலைஞர்கள் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்







Comments