What's new‎ > ‎

(கிழக்கு )மாகாண சபைத் தேர்தல் - 2012

posted Sep 6, 2012, 1:12 PM by Webteam Karaitivu.org

எம்மால் 2011ல் இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபைத் தேர்தலையெட்டி வெளியிடப்பட்ட கட்டுரையை தழுவி, கிழக்கிலங்கை அம்பாரை மாவட்ட   வாக்காளர்களை விளித்ததாக அமைகின்றது
.....


காரைதீவு. ஓர்க் இணையக்குழுமமானது எமது உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் எமது நடுநிலைத்தன்மையை பேணுவதற்காகவும் அரசியல் ரீதியாக எந்தவிதமான சார்புகளையோ எதிர்ப்புக்களையோ வெளிப்படுத்தவில்லை. எனினும் காரைதீவின் பொறுப்புள்ள ஊடகம் என்றவகையில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பாக ஒரு விளக்கமளிப்பை பொதுமக்களிடம் முன்வைக்கின்றோம்.

வாக்களிக்கும் முறை பற்றிய அறிவுறுத்தல்கள் 

  • காலையிலேயே வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்.
  • கட்டாயம் ஆளடையாள அட்டை அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் ஆளயாடளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துச்செல்லுங்கள்.
  • தேவையற்றவிதமாக வாக்குச்சாவடிக்கருகில் கூடித்திரியாதீர்கள்.
  • எந்த விதமான ஊக்குவிப்புக்களுக்கும் மயங்காதீர்கள்.
  • வன்முறை அடாவடித்தனத்திற்கு உங்கள் தீர்பை வழங்குங்கள்.
  • வீட்டில் உள்ளவர்கள், நண்பர்களின் கருத்தைக்கேளாது சுய புத்திக்கு வாங்களியுங்கள்.


உறவுகள், தெரிந்தவர், நண்பன், முதியவர், இளையவர், படித்தவன் படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்று பாராது எம்மவருக்கு முழுச் சமூகத்தக்கும்  பொருத்தமானவருக்கு  உங்கள் வாக்கை அளியுங்கள்”  யார் வந்தால் என்ன என்று இருக்காதீர்கள். எனக்கேன் என்று வீட்டில் முடங்கிக்கிடந்துவிடாதீர்கள்.

வாக்களிக்கும் முறை பற்றிய விளக்கம்


வாக்காளர்களே  உங்களைத்தேடிவரு ம் வேட்பாளர்கள் தந்துள்ள வாக்களிக்கும் சீட்டைவைத்துக்கொண்டு அல்லது மாதிரி வாக்கு சீட்டொன்றை கற்பனை செய்து கொண்டு நீங்கள் எவ்வாறு வாக்களிக்கப்போகிறீர்கள் என வீட்டிலிருந்தே ஆயத்தஞ்செய்துகொண்டு போங்கள். சில வாக்காளர் வாக்குச்சாவடியில் எவ்வாறு வாக்களிப்பதென்றுதெரியாமல் குழப்பமடையமுடியும்.  இதனால் நீங்கள் அளிக்கும் வாக்கு செல்லுபடியற்றதாக முடியும்.                                                                                                                                                                     
நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கக்கூடிய முறையை  கீழே தருகின்றோம்   

 பெட்டியின் விளிம்புகளில் படாதவாறு ஒரு கட்சிச் சின்னத்திற்கு
மாத்திரம் முன்னால் புள்ளடியிடவும்


பின்னர் விருப்பு வாக்குக்களை இடும் போது  கவனிக்க வேண்டியவை:


  • கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுவுக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்பினால் இலக்கங்களின் மேல்  புள்ளடியிடத்தேவையில்லை  
  • பிரதேச சபைத் தேர்தலைப்போல அல்லாது இங்கு ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு மாத்திரமே அளிக்கலாம்
விருப்ப இலக்கங்கள் பின்வருமாறு அமையும்


  •  நீங்கள் விரும்பும் ஒரு வேட்பாளர்களின் இலக்கம் அல்லது   வேட்பாளர்களின் இலக்கங்கள் மீது புள்ளடி இடலாம்
  • அதிகபட்சம் 3 பேருக்கே வாக்களிக்கலாம் .


காரைதீவு.ஓர்க்  ஆசிரியர் குழாத்தின் வேண்டுகோள்

எமது சமூகம் வாக்களிப்பில் அதிக ஈடுபாடு காட்டாமல் ஏனோ தானோ என்று இருந்தால்  எமது வாக்களிப்பு வீதம் குறையலாம். அத்துடன் எமது விகிதாசாரப்படியான உறுப்பினர்களைப் பெற்றுக்காள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே மனச்சாட்சிப்படி நீங்கள் விரும்பும் கட்சிக்கு கட்டாயம்  நீங்கள் வாக்களிக்கச் செல்வதுடன் உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் அயலில் உள்ளவர்களையும்  கட்டாயம் காலையிலேயே சென்று வாக்குகளை வீணடிக்காது வாக்களித்துவிட்டு வருமாறு வற்புறுத்துங்கள்

புலம்பெயர் காரைதீவு உறவுகள் இது தொடர்பான விளக்கமளிப்புக்களை உங்கள் உறவினர்களுக்கு  தெரியப்படுத்துங்கள்

வேட்பாளர்களே
முதியவர்கள் , முதன்முறையாக வாக்களிப்பவர்களுக்கு மாதிரி வாக்குச்சீட்டை வழங்கி வாக்களிக்கும் முறையை சொல்லிக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள்  வாக்கெடுப்பு நாளில் எல்லோரையும் வாக்குச் சாவடிக்குக் கொண்டு சேர்க்க வாகன உதவிகளை வழங்குங்கள்இப்படிக்கு
காரைதீவு .ஓர்க்
info@karaitivu.org
Comments