What's new‎ > ‎

கிழக்கில் சிறுவர் துஸ்பிரயோகம் - முக்கிய கலந்துரையாடல்கள்

posted Aug 21, 2010, 9:32 PM by Prasath Mendis Appu   [ updated Aug 21, 2010, 9:49 PM ]


கிழக்கில் சிறுவர் துஸ்பிரயோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்  மனித அபிவிருத்திதாபனம் இணைந்து மட்டு.அம்பாறை மாவட்டங்களில் முக்கிய கலந்துரையாடல்களை நடாத்தி வருகிறது.  
 
அம்பாரை தமிழ்பிரிவுக்காக கலந்துரையாடல் கல்முனை கிறிஸ்ரா இல்லத்திலும்
அம்பாரை சிங்களப் பிரிவுக்காக கலந்துரையாடல் அம்பாறை மனித உரிமை காரியாலயத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கலந்துரையாடல் பொது நூலக மண்டபத்திலும்  ; நடைபெற்றது.
 
அம்பாரை தமிழ்பிரிவுக்காக கலந்துரையாடல் மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் தலைமையிலும் அம்பாரை சிங்களப் பிரிவுக்காக கலந்துரையாடல் உரிமை ஆணைக்குழுவின் அம்பாறைப்  பிராந்திய இணைப்பாளர்  டபிள்யு. சந்ரஸ்ரீ தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கலந்துரையாடல் மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இரா.மனோகரன் தலைமையிலும் நடைபெற்றன.
 
மனித அபிவிருத்தி தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந் முன்னிலையில் இக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
 
மனித அபிவிருத்தி தாபனமானது 06 வருட காலமாக  அம்பாரை- மட்டக்களப்பு மாவட்டங்களில் செயற்பட்டு வருவதுடன் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் அதிகமான பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளையும் பெற்றக்கொடுக்கின்றது என்பது தெரிந்ததே.
 
 
கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் துஸ்பிரயோகம் தொடர்பான அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட முறைப்பாடுகள் பற்றிய கலந்துரையாடலின் போது அரச, அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளின் கருத்துகளுக்கமைய எதிர்காலத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தை குறைப்பதற்காகவும், சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் சிறுவர் பாதுகாப்பு குழு வலைப்பிண்ணல் அமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
 
 
இக்கூட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவம் ஏற்பட்டால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கடமையாற்றும் உரிய அரச அதிகாரிகள் வலையமைப்பு மூலம் செயற்பட்டு சம்பவம் தொடர்பான தரவுகளை சேகரித்து நீதி மன்றத்திற்கு  சமர்ப்பிக்க்கூடியவாறு இவ்வலைப்பிண்ணல் அமைப்பு செயற்பட வேண்டும்.
 
மனித அபிவிருத்தி தாபனம் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அரச அமைப்புகளில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 
தெற்காசிய நாடுகளில் பின்தங்கிய பிரதேசங்களிலும் எமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாரை-மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் 49 முறைப்பாடுகளும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 கிடைக்கப்பெற்றுள்ளது.
 
அதிகளவிலான சிறுவர் துஸ்பிரயோகம் பாடசாலைகளிலும், மேலதிக வகுப்புகளிலும்;, தனியார் கல்வியகங்கலிலும், உறவினர்களாலும்,பஸ்பிரயாணங்களின் போதும், வேலை செய்யும் இடங்களிலும் இடம்பெறுகின்றது. குறிப்பாக பாடசாலைகளில் அதிகளவிலான சிறுவர் துஸ்பிரயோகம் ஏற்படுகின்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் சட்ட வைத்திய அதிகாரிகள் (JMO)பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவு (APS)கல்முனை அக்கரைப்பற்று சிறுவர் நன்நடத்தை பொறுப்பாளர் (PU)கல்முனை அக்கரைப்பற்று சம்மாந்துறை(ZEO) திருக்கோவில் வலயக்கல்வி உத்தியோகஸ்தா ;பிரதேச செயலக அதிகாரிகள் (DS)அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் (NGO)மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகஸ்தர்கள் (HRC)இக்கலந்துரையாடலில் பங்கு பற்றினர்.

பங்கு பற்றிய அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிகள் சிறுவர் துஸ்பிரயோகத்தை குறைப்பதற்காகவும், சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் கூறிய கருத்துகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:-

  • சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறினார்.
  •  குற்றங்கள் தவிர்க்கப்படவேண்டும் எனவும் சாதாரண பொதுமக்களின் பார்வைக்கு குற்றங்களையும், தண்டனைகளையும் விளம்பரப்படுத்த வேண்டும். இதன் மூலம் குற்றங்களை குறைத்துகொள்ள முடியும்.
  •  பாடசாலை, கிராம மட்டங்களில் சிறுவர் துஸ்பிரயோகம,; சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை  நடாத்த வேண்டும்.
  •  சிறுவர் துஸ்பிரயோகம் ஒன்ற இடம்பெற்றால் யாரை தொடர்பு கொள்வது, எவ்வாறான முறையில் முறைப்பாடு செய்வது என்பது பற்றிய போதுமான விளக்கம் மக்களுக்கு அறிவிக்கப்பட வெண்டும். சிறுவர் துஸ்பிரயோகம் ஒன்று இடம்பெற்றால் அது தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு உடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
  •  சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடு செய்பவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம், பொருள் உதவி செய்து தாருங்கள் என கூறுகிறார்கள். மேலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து நீதி மன்றத்திற்கு எடுத்து சென்றால் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பாதிக்கப்ட்ட தரப்பினர் கூறி நீதி மன்றத்திற்கு வருவதிலிருந்து தவிர்துக்கொள்கின்றார்கள். இது தொடர்பாக பொத மக்களுக்கு விழிப்புணர்வுகளை  நடாத்த வேண்டும்.
  •  சிறுவர் துஸ்பிரயோகச்; சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஏதாவது தடயப் பொருட்கள் கிடைத்தால், அதனை பொலிஸிடம் ஒப்படைப்பதன் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்பது இலகுவாக இருக்கும்;. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும், உதவியும் அவசியமாகும். இதனை பொத மக்களுக்கு அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் வலியுறுத்த வேண்டும்.
  •  பொலிஸ் நிலையத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டால் அதனை சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருக்கு அறிவிக்க வேண்டும். வைத்திய அதிகாரிகள் முறைப்பாடு தொடர்பான அறிக்கையை 48 மணித்தியாலயத்திற்குள் பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தர வேண்டும்.
  •  பாடசாலைகளில் ஏற்படும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தால் பொலிஸினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
  •  மனித உரிமை ஆணைக்குழு மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லம் அம்பாரை மாவட்ட கரையோரப் பகுதியில் அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  •  சிறுவர் துஸ்பிரயோகம் ஒன்று ஏற்பட்டால் அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஓவ்வொரு பிரதேசத்திலும் அவசரமாக செயற்படக் கூடிய அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்த வலைப்பிண்ணல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
  •  இவ்வமைப்பானது சிறுவர் துஸ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், நடந்த பிறகு எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளையும், சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஏதாவது பிழைகள் ஏற்பட்டால் அது தொடர்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் செயற்பட வேண்டும். சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் மட்டுமல்லாமல் சிறுவர் வன்முறைகள் தொடர்பாகவும் இவ்வமைப்பு சட்ட நடவடிக்கை, தீர்மானம் போன்றன எடுக்கப்பட வேண்டும்.
  • பிரதேச செயலகங்களில் கடமையாற்றக்கூடியவாறு ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்தி;லும்; சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் நியமிக்கப்பட வேண்டும்.
  •  கிராம மட்டங்களிலுள்ள வள நிலையங்களை  சிறுவர் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும,;  சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஊக்கப்படுத்துதல் வேண்டும்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் அரச, அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளின் கருத்துகளுக்கமைய எதிர்காலத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தை குறைப்பதற்காகவும், சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் சிறுவர் பாதுகாப்பு குழு வலைப்பிண்ணல் அமைப்பு ஒன்று அம்பாரை மாவட்டத்தில் மட்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ்வலைப்பிண்ணல் அமைப்பில் இணைந்து கொண்ட அரச, அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளாக  சட்டத்தரணிகள் சட்ட வைத்திய அதிகாரி (கல்முனை, கல்முனைக்குடி, அக்கரைப்பற்று)பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவு சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர்கள் (கல்முனை, அக்கரைப்பற்று, பொறுப்பாளர்கள்)தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மனித உரிமை ஆணைக்குழுவும் மனித அபிவிருத்தி தாபனமும்  ஆகியோர் அடங்குவர்.


...
தகவல்
Thambirajah Sahadevarajah
Comments