What's new‎ > ‎

கவிதைக்கான மாகாணமட்ட உயர் விருது

posted Oct 20, 2010, 6:00 PM by Prasath Mendis Appu


2010ம் ஆண்டிற்கான “ கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா “ வில் கவிதைக்கான முதலமைச்சர் விருதிற்காக காரைதீவு – 11ம் பிரிவைச் சேர்ந்த கவிஞர் பொன். சிவானந்தன் அவர்கள் தெரிவாகியுள்ளார். 

முதலமைச்சர் விருதிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட 15 கலைஞர்களில், இவ் விருதிற்காக இவர் பரிந்துரைக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் 2010 ஒக்டோபர் 23, 24ம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் நிகழ்வில் அவர் கௌரவிக்கப்படவுள்ளார்.

மண்டூரைப் பிறப்பிடமாகக்கொண்ட ஓய்வுபெற்ற அதிபரான இவர் ஏற்கனவே  பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் பல விருதுகளைப் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இவ்விருது கிடைக்கப்பெற்றமையையிட்டு காரைதீவு மற்றும் மண்டூர் மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.


பத்திரிகை வாயிலாக…….   (வீரகேசரி – 19.10.2010)





Thankx
Muthulingam Ramaneetharan
Comments