What's new‎ > ‎

காரைதீவு விபுலானந்தாவில் மாணவி சாதனை

posted Apr 16, 2010, 10:31 AM by Web Team
வைரவிழா ஆண்டினை கொண்டாடிக் கொண்டிருக்கும் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.த.(சா.த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் செல்வி சுகன்யா ஜெயசுந்தரம் அவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இதே பாடசாலையைச் சேர்ந்த  டனுஸ்கா உதயகுமார் அவர்கள் 7 ஏ  2 பீ சித்திகளைக்பெற்றுள்ளார். கடந்த வருடம் இப்பாடசாலை மாணவர்களின் கல்வியானது பாடசாலை ஆசிரியர்களின் திடீர் இடமாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அதிபர். தி.வித்தியராஜன் அவர்கள் தான் பதவியேற்ற சில நாட்களுக்குள்ளேயே மேலதிக வகுப்புக்களையும் மீட்டல் வகுப்புக்களையும் ஏற்பாடு செய்து மாணவர்களை தயார்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்
Comments