What's new‎ > ‎

காரைதீவு பிரதேச சபைக்கு யுனொப்ஸ் நிறுவனத்தின் இன்னுமொரு அன்பளிப்பு

posted May 24, 2012, 8:14 AM by Suranuthan Sothiswaran   [ updated May 24, 2012, 8:15 AM ]
அம்பாரை மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தின் ஒரு அங்கமான காரைதீவு திண்மக்கழிவு இடமாற்று நிலையத்தின் செயற்பாட்டினை மேலும் வினைத்திறனாக்குவதற்காக 10 சக்கர கனரக ஊர்தி ஒன்று யுனொப்ஸ் நிறுவனத்தினால்  காரைதீவு பிரதேச சபைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் யுனொப்ஸ் திட்ட முகாமையாளர் Ms. Celia Marquez அவர்கள் சம்பிரதாய பூர்வமாக வாகனத்தின் சாவியை  உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. AJM. இர்சாட் மற்றும்  காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் திரு. S. இராசையா ஆகிய இருவரிடமுடம் கையளிப்பதனை படங்களில் காணலாம்  . இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்  திரு.Y.கோபிகாந்த்,  காரைதீவு பிரதேச சபை செயலாளர் திரு..S.நாகராஜா, உள்ளுராட்சி உதவியாளர் திரு.S.சிவானந்தம், மற்றும் தலைமை இலிகிதர் திரு.K.கணேஸ்வரன் ஆகியோருடன் யுனொப்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த  Ms. Ana B. Sacramento (CB/Operations Manager), Mr.S.Sivakumaran (SWM Specialist) ,Mr.P.Kuruparan   (Technical Operations Manager) உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

Photos:P.Thineshkanth (Webteam)
Comments