What's new‎ > ‎

காரைதீவு பிளஸ் கல்வியகத்தில் சில மனப்பிறழ்வு கொண்ட நபர்களின் அட்டகாசம்

posted Nov 18, 2010, 10:14 AM by Web Team
காரைதீவு தேசிகர் வீதியில் அமைந்துள்ள பிளஸ் கல்வியகமானது தனியார் கல்வியகமாக இருப்பினும் இலாப நோக்கமற்று மாணவரின் நன்மைக்காக செயற்பட்டு வருவதுடன் பல்வேறு நலத்திட்டங்களையும் மேற்கொண்டு வருவது அறிந்ததே. மேலும் அண்மையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை  பாராட்டியதுடன் அம்மாணவர்களை வாழ்த்தி ஓரு பதாகையையும் காட்சிப்படுத்தியிருந்தது.

எனினும் இக்கல்வியகத்தின்மீது காழ்ப்புணர்வுடைய மனப்பிறழ்வு கொண்ட சில நபர்கள் நேற்றிரவு இப்பிளஸ்  கல்வியகத்தினுள் அத்துமீறி நுழைந்து இப்பதாகையையும் பிளஸ் கல்வியகத்திற்கு சொந்தமான 4 பிளாஸ்டிக் கதிரைகள், 2 Energy Saver மின்குழிழ்கள் 1 றீம் A4 தாள் 2 றீம் பரீட்சைத்தாள்கள்   White Board Marker  4 .  திருடிச்சென்றுள்ளதுடன' வாங்குகளுககும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர் .

கல்வியக சொத்துக்கள் பறிபோனதிலும் பார்க்க இம்முறை சித்தியெய்திய பிஞ்சுக்குழந்தைகளின் படங்கள் பொறிக்கப்ட்பட பதாiயைக எடுத்து சென்றது  மிகுந்த கவலையளிப்பதாகவும்; இதற்குரிய பதிலை காலம் வழங்கும் என நம்புவதாகவும்  கல்வியகப் பணிப்பாளர்களான கோபி, சிவா, பிரசாத் மற்றும் சுரேன் ஆகியோர்  தெரிவித்தனர்
Comments