What's new‎ > ‎

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு 2012

posted Aug 20, 2012, 9:03 AM by Sulecshan Logaraju

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் 5ம்தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர(கலைப்பிரிவு) மாணவர்களுக்கான கருத்தரங்கானது இம் முறையும் மிகவும் சிறப்பான முறையில் விபுலாநந்தா ஞாபகார்த்த மணிமண்டப கட்டிடத்தில் நடைபெற்றது(28.07.2012 தொடக்கம் 01.08.2012வரை). இக்  கருத்தரங்குகளுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளரும் எமது ஒன்றிய ஸ்தாபகர்களுள் ஒருவருமான  கலாநிதி       க.கணேசராஜா மற்றும் எமது ஒன்றிய ஆலொசகர்களுள் ஒருவரும் கணக்காளருமான(Accountant) சி.சசிதரன்  ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.


நடாத்தப்பட்ட கருத்தரங்குகள்


புலமைப்பரிசில் கருத்தரங்கு – ஆசிரியர் -   S.கஜேந்திரன்  (கிழக்குப்பல்கலைக்கழகம்)

அரசறிவியல் -   ஆசிரியர் -  J.R.டேவிட்   (ஆசிரிய ஆலோசகர் - திருக்கோவில்)

தமிழ் - ஆசிரியர் - வே.செவ்வேள் (ஆசிரியர்  கார்மேல் பாத்திமா கல்லூரி –கல்முனை)

இந்துநாகரிகம்இஇந்துசமயம் - S.விமல்ராஜ் (ஆசிரியர் -உவெஸ்லி உயர்தர பாடசாலை –கல்முனை)

கர்நாடக சங்கீதம் - ஆசிரியர் - திருமதி.ஜெயகணேஸ் புவனேஸ்வரி (ஆசிரியர்- சண்முகா மகா வித்தியாலயம் - காரைதீவு)
 
இக் கருத்தரங்குகளின் போது மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுவாமி விபுலாநந்தரின் இல்லம் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்
 
 
Info & Photos
S.Kajendran( Secretary)
 
 

Comments