What's new‎ > ‎

காரைதீவு.ஓர்க் இணையக்குழுவின் விசேட சந்திப்பு

posted Sep 10, 2012, 9:55 AM by Webteam Karaitivu.org   [ updated Oct 18, 2012, 7:59 AM by Suranuthan Sothiswaran ]
எமது இணையத்தளத்தின் போசகாகளில் ஒருவரும், சமூகசேவகருமான திரு கனகசபாபதி யோகராஜா(சுவிஸ்) வருகைதந்தவேளையில் எமத இணையக்கழ உறுப்பினர்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருந்தார். எமது இணையதள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் திரு. யோகராஜா அவர்களும் அவரது புதல்வரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இணையத்தள முகாமைத்துவப் பணிப்பாளர் Dr. பிரசாத் மெண்டிஸ் அப்பு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எமது இணையத்தளத்திற்கு அவசியமாக தேவைப்பட்ட உபகரணத்தொகுதிகளை திரு.யோகராஜா அவர்கள் வழங்கி வைத்ததுடன் எமது இணையத்தளத்தின் சேவைகளைப்பாராட்டி உரையாற்றினார்.

மேலும் திரு.யோகராஜா அவாகள் எமது இணையத்தளம் ஆரம்பித்த காலத்திலிருந்து எமது இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தமைக்காகவும், எமது கிராமத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தன்னாலியன்றவரையில் ஆற்றிவரும் சேவைகளைக்கௌரவிக்குமுகமாகவும், காரைதீவு.ஓர்க் இணையத்தளத்தால் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்.


இந் நிகழ்வில் காரைதீவு ஒர்க் இணையத்தள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட இணையத்தள உறுப்பினாகளும் ஆலோசகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது







Comments