What's new‎ > ‎

காரைதீவு.ஓர்க் இணைய ஆசிரியர்குழாம் விடுக்கும் அறிவித்தல்

posted Jan 15, 2011, 7:34 PM by Web Team
எமது பிரதேசத்தில் சமூக சேவகர்களாக இருக்கின்ற பல்வேறு அரசியல் பிரமுகர்களால் எமது மக்களின் உயர்ச்சிக்காக பல வருடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பங்களிப்புச் செய்துகொண்டுவருவதையும் கிராம மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதையும் நாம் அறிவோம். அண்மைக்கால வெள்ள அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது சொந்தப்பணத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணமளித்தவர்கள் பற்றியும் நாம் அறிவோம். அதற்க்கு எமது கௌரவத்துடனான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனினும் எமது பிரதேசத்தில் உள்ளுராட்சித்தேர்தல் நடைபெற இருப்பதால் எமது செய்திகளை நடுநிலையாக பிரசுரிப்பது நல்லது என எண்ணுகின்றோம். அந்த வகையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும்போது அவ்வாறான வசதிகள் இல்லாத வேட்பாளர்கள்  தொடர்பான செய்திகள் வெளிவராததால் அவர்கள்  பாதிக்கப்படுவதுடன் நாம் ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது கட்சியை சார்ந்து நிற்பதாக தோற்றப்படலாம். அத்துடன் நாம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவகையில் செயற்படவேண்டியுள்ளதாலும் எமது இணையத்தளமானது காரைதீவு மண்ணிலிருந்தே இயக்கப்படுவதால் இணைய ஆசிரியர்களின் பாதுகாப்பினைக்கருத்தில் கொண்டும், எதாவது அரசியல் சாயம் பூசப்படும் போது எமது உறுப்பினர்களில் தனிப்பட்ட தேவைபளைப்பூர்;த்தி செய்வதில் தடங்கல் ஏற்படலாம் என்ற காரணத்தாலும் தோதலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான செய்திகளை தவிர்க முடிவெடுத்துள்ளேம் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் எதிர்வரும் காலங்களில் மக்களால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகத்திற்கு என்றும் நாம் உறுதுணையாய் இருப்போம் எனவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேம்


அத்துடன் பல காரைதீவுமக்களின் வேண்டுகொளுக்கிணங்க எமது facebook குளுமத்தில் தேர்தல் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் இம்முறை இடமளிக்கவுள்ளோம். தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பக்கச்சார்பாக இருக்குமிடத்து அல்லது பொருத்தமற்ற விடயங்களையோ  பிழையான தகவல்களையொ கொண்டிருக்குமிடத்து அல்லது ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்களை கொண்டிருக்குமிடத்து அவைகளை நீக்கவேண்டி வரும் என தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் மீண்டும் மீண்டும் அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பவர்களை குளுமத்திலிருந்து நீக்கவேண்டி வரும் எனவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இணைய ஆசிரியர் குழு  
Comments