What's new‎ > ‎

karaitivu.org WebTeam ன் வருடாந்த ஒன்று கூடல்

posted Apr 23, 2011, 4:34 PM by Web Team   [ updated Apr 28, 2011, 5:48 PM ]
 


காரைதீவு.ஓர்க் (karaitivu.org) இணையத்தளம் 3 ஆண்டுகளின் நிறைவில்....

     எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு 20-03-2011 உடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதையிட்டு பெருமிதமடைகிறோம். இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கங்களை குறிப்பிட்ட அளவிலாவது பூர்த்தி செய்யக்கூடியதாயிருந்ததையிட்டு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  எமது காரைதீவு கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதுடன் எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான உறுதியான அடித்தளம் எம்மால் இடப்பட்டுள்ளது என நம்புகிறோம்.

     எமது கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகளை இயன்றளவு உடனுக்குடன் அறிவிப்பதுடன் எமது கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் பிரசுரித்து வந்துள்ளோம்.மேலும் பொது அறிவுத்தகவல்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பற்றியும் நாம் அறியத்தந்தோம். ஒரு பொறுப்புள்ள இணையத்தளம் என்றவகையில் எமது இணையத்தளத்தில் ஏதாவது பொருத்தமற்ற விடயங்கள், பிழையான தகவல்கள்,  ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்களைக் தவிர்த்துக்கொள்ள நாம் மிகுந்த கவனம் எடுக்கின்றோம் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எமது பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து தேவையான மாற்றங்களை செய்தோம், அவர்களுக்கு போதிய விளக்கங்களை அளித்தோம்.

     இந்த சந்தர்ப்பத்தில் இவ்விணையத்தளம் சிறப்பாக அமைய ஒத்துழைத்த அனைத்து இணையக் குழு உறுப்பினர்களுக்கும், இணைய நண்பர்களுக்கும், கடல்கடந்த அன்பர்களுக்கும், ஆலோசகர்களுக்கும், செய்திகளை அனுப்பி உதவிய நிருபர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், புகைப்பட கலைஞர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் இனிவரும் காலங்களிலும் தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

    கடந்த 2 வது ஆண்டு நிறைவிற்காக கட்டுரைப்போட்டி ஒன்றினை நடாத்தி பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினோம். இதற்கு அனுசரணை வழங்கிய karaitivu.com, எமது நண்பர் இ.பிரதீபராஜ் (அவுஸ்திரேலியா) மற்றும் புலம்பெயர்ந்து வாழும் எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றிக்கொண்டிருக்கும் பெயர்குறிப்பிட விரும்பாத அன்பர் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்வதுடன் அந்தவிழாவில் கலந்து சிறப்பித்த அதிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். முக்கியமாக நிகழ்ச்சியை நடாத்துவதற்கு பக்கபலமாக இருந்து உதவிகளை செய்த JET அணியினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

     மேலும் இவ்வருடத்தில் wiki.karaitivu.org எனும் இணையம் மூலமாக காரைதீவு பற்றிய தகவல் களஞ்சியத்தினை முன்னெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது சம்பந்தமான தங்கள் கருத்துக்களை info@karaitivu.org ஊடாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

     இத்தருணத்தி முக்கியமான ஒரு விடயத்தை மீண்டும் வலியுறுத்தி கூறுவது நல்லதென்று நினைக்கிறோம். எமது இணையத்தமானது தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆர்வலர்களாக உள்ளவர்களும் காரைதீவின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களுமான, karaitivu.org WebTeam இன் உறுப்பினர்களாலேயே தன்னார்வ (Voluntary) அடிப்படையில் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்த இணையத்தளம் வேறு ஓருவரினதும் கட்டுப்பாட்டிலோ அல்லது வழி நடத்தலிலோ இல்லை. அத்துடன் எமது இணையத்தளமானது karaitivu.org தவிர்ந்த ஏனைய எந்த நிறுவனத்திற்கோ, விளையாட்டுக் கழகத்திற்கோ, தனிநபருக்கோ பக்கச்சார்பானதாக இருக்காது.

    
அத்துடன் எமது இணையத்தளத்தின் செய்தின் பதிவேற்றமானது முற்றிலும் தன்னார்வம் கொண்ட எமது இணையக்குளுவினரால் நடாத்தப்படுவதுடன், எமது அங்கத்தவர்கள் தமது சொந்த புகைப்படக்கருவிகளையோ அல்லது அல்லது இரவல் அடிப்படையிலோ பயன்படுத்தி வருகின்றனர். மேலும் எமக்கென்று ஒரு scanner இல்லாததன் காரணமாக சில அறிவித்தல்களைப் பதிவேற்றுவதில் சிரமம் காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில நிகழ்வுகளையோ அல்லது அறிவித்தல்களையோ பதிவேற்றாமல் விடும்போது எம்மீது சிலர் மனக்கிலேசம் கொள்கின்றனர். எனினும் அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது யாதேனில் நீங்களும் எமது விதிகளுக்கு (Terms) உட்பட்டு இணையக்குழுவில் அங்கத்தவராகி செய்திகளை பதிவேற்றுங்கள். உதாரணமாக எமது கிராமத்திலிருந்து சுமார் 100 பேர் வருடாவருடம் பல்கலைக்கழகப்பட்டம் பெறுகின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு நபரின் புகைப்படத்தை நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பிட்ட நபரின் அனுமதியுடன் பிரசுரிக்கும் போது, அதனை குறை கூறு வதை விடுத்து மேற்கூறிய வழியில் நீங்களும் தகவல்களை எமக்கு அனுப்பி பிரசுரிக்கலாம்.

     அத்துடன் மென்மேலும் எமது பணிசிறக்க உங்கள் நல்லாதரவினை வேண்டி நிற்கின்றோம்

     நேரமின்மை காரணமாகவும், எமது அங்கத்தவர்கள் கல்வி மற்றும் தொழில் நோக்கங்களுக்காக துார இடங்களில் வசித்துவருவதாலும், எமது வருடாந்த ஒன்று கூடலானது பிற்போடப்பட்டு 16-04-2011 அன்று இடம்பெற்றது (இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்).

karaitivu.org WebTeam ன் வருடாந்த ஒன்று கூடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

எம்முடன் தொலைபேசி மற்றும் இணையம் மூலம் இணைந்து கொண்ட எமது karaitivu.org WebTeam அங்கத்தவர்கள் மற்றும் karaitivu.org நண்பர்கள்


Comments