What's new‎ > ‎

காரைதீவு கிராமத்திற்கு கிடைத்த ஒரு இளம் அரச நிர்வாகி திருவாளர் .எஸ்.ஜெகராஜன்

posted Jan 17, 2012, 12:10 AM by Lavanyan Thiruchelvam   [ updated Jan 20, 2012, 4:33 AM ]

காரைதீவு பிரதேசசெயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக காரைதீவைச்சேர்ந்த சிவஞானம் ஜெகராஜன் (வயது 38) இன்று 11 ம் திகதி புதன்கிழமை பதவியேற்கிறார்.இலங்கை நிருவாக சேவை -2004 மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்று 2007 முதல் காரைதீவு உதவி பிரதேச செயலாளராக சேவையாற்றிவந்தார். ஏலவே நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 8 வருடங்கள் புலனாய்வு உத்தியோகத்தராகப் கடமையாற்றியிருந்தார். பன்மொழி ஆற்றலுள்ள திரு.ஜெகராஜன் சிவஞானம், சுந்தரவல்லி ஆசிரியத் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரராவார்.  இரு குழந்தைகளின் தந்தையான இவர் விஞ்ஞான தொழில்நுட்ப  உத்தியோகத்தர்  செல்லத்துரை சுபாஜினியின் கணவராவார். இவர் காரைதீவு பிரதேச செயலகத்தின் இரண்டாவது பிரதேச செயலாளராக இன்று கடமையேற்கிறார். அன்னாருக்கு எமது இணையத்தளத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Comments