What's new‎ > ‎

காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் சாதனை

posted Jul 16, 2012, 7:42 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 18, 2012, 7:57 AM ]


காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலை மாணவியான செல்வி. லோ. புவித்திரா அண்மையில் நடைபெற்ற முதலாம் பிரிவு பேச்சுப்போட்டியில்  அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப்பெற்று காரைதீவு மண்ணுக்கு பெருமைதேடித் தந்துள்ளார். இவர் திரு திருமதி லோகநாதன் (ஆசிரியர்) சுந்தரேஸ்வரி (தாதிய உத்தியோகத்தர்) ஆகியோரின் கனிஷ்ட புதல்வியாவார்.

சாதனையாளர் புவித்திராவுக்கும் அவரைப்பயிற்றுவித்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றோருக்கு எமது பாராட்டுக்கள்

Comments