What's new‎ > ‎

காரைதீவில் துளிர்விடும் ஒற்றுமைச்சுடர்

posted Apr 26, 2012, 9:43 AM by Suranuthan Sothiswaran   [ updated Apr 26, 2012, 9:54 AM ]
காரைதீவிலுள்ள கடினபந்துக்கழகங்களை பொதுச்சுற்றுப்போட்டிகளின்போது ஒன்றிணைக்கும் நோக்கத்திற்காக விடேச வைத்திய நிபுணர் . Dr.A. வரதராஜா (Canada) அவர்களின் ஏற்பாட்டில் காரைதீவு மண்ணின் பழம் பெரும் கழகங்களான காரைதீவு விளையாட்டுக்கழகம் மற்றும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் என்பனவற்றுடன் வளர்ந்துவரும் கடினபந்துக்கழகமான ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகம் என்பன இணைந்து ஐக்கிய கழகமாக “காரைதீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம (UNITED SPORTS CLUB OF KARAITIVU) எனும் பெயரில் எதிர்வரும் சுற்றுப் போட்டிகளில் எமது கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ளனர். அனைத்து வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்காக ஒவ்வொரு அணியிலிருந்தும் 36 வீரர்களின் பெயர் பெறப்பட்டு ஓரு குழாம் அமைக்கப்பட்ட அதிலிருந்து 3 அணிகள் பிரதிநிதித்துவப்படுத்தலாம் எனவும்,  அணி வீரர்களின் ஓழுக்கம் சம்பந்தாமாக அனைத்து தாய்க்கழகங்ளும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வமைப்பின்  போசகராக Dr.A. வரதராஜா (Canada)மற்றும் திரு T நவநீதன் (France) ஆகியோர் செயற்படவுள்ளதுடன் வருடாவருட சுழற்சி முறையில் தலைவர்,  செயலாளர் முதலான பதவிகள் வழங்கப்படவுள்ளன. தற்போதைய தலைவராக திரு LA. ரமேஸ்குமர் அவர்களும் செயலாளராக திரு. V. அருட்குமரன் அவர்களும் உபதவைலராக திரு. C.நந்தகுமார் அவர்களும். உபசெயலாளராக திரு K.கஜன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் கழக நிறங்களாக, நீலம், மஞ்சள், கறுப்பு மற்றுமு; சிவப்பு என்பன தெரிவு செய்யப்பட்டன.

நடுநிலையான தெரிவுகளை உறுதிப்படுத்த திரு.ஜெயசித்(Manager Peoples Bank) . திரு. ஜெகராஜன்(Divisional Secretary, Karaitivu) மற்றும் திரு சுதாகரன்  (Divisional Secretary) ஆகியாரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய  Dr.வரதராஜா  "மேற்படி முன்னெடுப்பில் எவ்வித மறைமுக நிகழ்சிநிரல்களும் இல்லை எனவும், எமது இளைஞர்கள் வெறுமனே பொழுழுதுபோக்காக விளையாடாமல். தமது திறமைகளை வெளிக்;காட்டி மாகாண மட்டத்தில் மட்டுமன்றி தேசிய மட்டத்திலும் பிரகாசிக்கவேண்டுமெனவும் மேற்படி மட்டங்களை அடைய மிகச்சிறந்த அணியை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்ந்த மட்டங்களில் போட்டிகளில் பங்கு கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன் சிறப்பாக விளையாடும் உறுப்பினர்களுக்கு கொழும்பு மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு அனுப்பி பயிற்சி வழங்குவதற்கும் விசேட பயிற்றுவிப்பாளர்களை அழைதம்து பயற்றுவிப்பதற்கும்  முயற்சிகள் எடுக்கமுடியும்" என தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு கழகமும் தனது தனித்துவத்தை இழக்காது எனவும் தனித்தனியே பயிற்சிகளில் ஈடுபடலாம் எனவும் சுற்றுப்போட்டிக்கு முந்திய 2 வாரங்கள் இணைந்து பயிற்சி பெறலாம் எனவும்  தெரிவித்தார்  மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட  காரைதீவின் மிகச்சிறந்த அதிரடித்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு. சுதாகரன் அவர்களும் மேற்படி கழகத்திற்கு தனது அனுசரணையயை வழங்குவதாக தெரிவித்தார். மேற்படி  நிகழ்வில் விவேகானந்தா செயலாளர் திரு மோகானராஜா, கிறிக்கட் தலைவர் சோபிதாஸ்,  ஜொலிகிங்; கழக் தலைவர் பகீரதன்,மற்றும் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் திரு சுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைதீவின் கழங்கங்கள் இணைந்து இவ்வாறு செயற்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது என பலவிளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 



Comments