What's new‎ > ‎

காரைதீவில் அற்புதம் அதிசயம்

posted Aug 20, 2012, 8:06 AM by Sulecshan Logaraju
காரைதீவிலுள்ள வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டோகொட்டென்று கொட்டுகின்றது.காரைதீவு 7 ஆம்குறிச்சியிலுள்ள குணசேகரம் சாந்தி என்பவரின் வீட்டிலுள்ள சாமியறையில் சாயி படம் மற்றும் அருகிலுள்ள ஏனைய சுவாமி படங்களிலிருந்தும்  கடந்த கதிர்காமக்கொடியேற்றதினமான 18ம் திகதியிலிருந்து விபூதி வர ஆரம்பித்தது.ஒரு மாதம் கடந்தும் கொட்டிக்கொண்டேயிருக்கிறது.மேலும் அவர்களுக்கு கனவில் தோத்திரவாகி தனக்கு உணவு பரிமாறுமாறு பகவான் கேட்டுக்கொண்டதற்கமைவான தினமும் உணவும் பாலும் வைக்கபடுகிறது. வைத்து அரைமணிநேரத்தினுள் அரைப்பகுதி முடிந் துவிடும்.அவ் அற்புதமும் நடக்கிறது.தினமும் மக்கள் படையெடுக்கின்றனர்.
 
படங்களும் தகவலும்   வி.ரி.சகாதேவராஜா
Comments