What's new‎ > ‎

Obituary Notice – Late.P.Murugaiya (Rtd.Principal)

posted May 9, 2012, 7:46 AM by Lavanyan Thiruchelvam   [ updated May 9, 2012, 7:53 AM ]

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் முன்னைநாள் கல்லூரி முதல்வர் மதிப்புக்குரிய பொ.முருகையா அவர்கள் இன்று 08.05.2012 அதிகாலை அகால மரணமடைந்தார்.அன்னாரின் ஆன்மா சாந்திபெற பிராத்திக்கின்றௌம்.


கல்முனையில் இன்று கண்ணீரில் கடல் பெருக்கம் 

மண்ணைத்தோண்டி பொன் எடுக்கும் மன‌ங்கள் இன்று
குழி மண்ணைத் தோண்டி பசும் பொன் புதைக்கும் 
நேரம் வந்ததே 

சிம்மத்தின் கர்ச்சனை கண் இமைக்கும் நேரத்தில் கலைந்ததே
சீர் செய்த கல்வி மகன் சீழ் உடல் இன்று சிதையுதே

இந்த மெய் போர்த்த பொய் உடலை
மெய்பிக்க உயிர் நுளைத்தாய் 
மயிர் இழையில் உயிர் குடித்து
எங்கள் மன்னவனை நீ பிடித்தாய் இது நியாயமா?????

வாழ்கை புரிகிறது எல்லாம் மாயய் என்று
வாழ்கையின் நியதியது..... குணத்தால் எங்களை வென்றவரே
நிம்மதியாய் சென்றுவா எம் தலைமகனே!!!!

உம் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றௌம்.






பழைய மாணவர்கள்
உவெஸ்லி உயர்தர பாடசாலை
காரைதீவூ
Comments