What's new‎ > ‎

கணினி சம்பந்தப்பட்ட எழுத்தாக்கப்போட்டி

posted Mar 30, 2010, 8:25 PM by Web Team   [ updated Mar 30, 2010, 8:29 PM ]
மதிப்புக்குரியவர்களே,

எமது www.karaitivu.org இணையத்தளமானது ஆரம்பிக்கப்பட்டு 20-03-2010 திகதியுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகி இருப்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . இந்த இணையத்தளமானது தங்களது மேலான ஆதரவுடனும், எமது இணையக்குழு உறுப்பினர்களின் சேவையடிப்டையிலான பங்களிப்புடனும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த முறை எமது இணையத்தளத்தின் 2ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு பிரதேச பாடசாலைகளிடையே கணினி சம்பந்தப்பட்ட எழுத்தாக்கப்போட்டி ஒன்றினை நடாத்தி அவர்களுக்கு பரிசில்கள் வளங்குவதன் முலம் அவர்களுடை கணினி சம்பந்தப்பட்ட அறிவுத்தேடலை வளர்க்கலாம் என கருதுகின்றோம். அதற்கான போட்டி சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களையும் பாடசாலைக்கு வளங்கியுள்ளோம். இவற்றிற்கு பரிசுகள் வழங்குவதற்கும் எளிமையான வைபவம் ஒன்றினை நடாத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது இணையக்குழு உறுப்பினர்கள் தமது நிதிப்பங்களிப்பினை வழங்க உடன்பட்டுள்ளனர் (இதுவரை காலமும் எமது இணையக்குழு உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்புடனேயே இவ்விணையத்தளமானது கொண்டு செல்லப்படுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்). எனினும் இந்த நிகழ்வில் நிங்களும் உங்களுடைய பங்களிப்பினை வழங்கி இவ்விழாவினை மேலும் சிறப்பாக நடாத்துவதற்கு உதவ விரும்பின் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பரிசுப்பொதிகளை (புத்தகங்கள் முதலானவை) வாங்குவதற்கு உரிய உதவிகளைச் செய்யலாம்.

மேலதிக விபரங்களுக்கு info@karaitivu.org க்கு தொடர்பு கொள்ளவும். இப்போட்டி சம்பந்தமான விடயங்களில் தங்களது பரோபகாரத்தினை மெச்சும் வகையில் நாம் பரிசளிப்பின்போது வெளிப்டுத்துவோம் எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம்.   

We have already collected the articles and planing to arrange the prize-giving event on 11th April 2010.


நன்றி,

Karaitivu.org
இணையக்குழு


PS - Please pass this message to other Karaitivans who would like to offer their contribution in the prize giving.


Comments