What's new‎ > ‎

கலாபூஷண விருது – 2010:- கவிஞர். பொன். சிவானந்தம்

posted Dec 9, 2010, 6:10 PM by Amareeshan Narendran
2010ம் ஆண்டிற்கான “கலாபூசணம்” விருது பெறுபவர்களில் ஒருவராக கவிஞர். பொன். சிவானந்தம்
அவர்களும் தெரிவுசெய்யப்படடுள்ளார். இவ்விருதானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவருக்கு
வழங்கப்படுகின்றது.மேற்படி விருது வழங்கும் வைபவமானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி ஜோன் டீ சில்வா ஞாபகார்த்தக்கலையரங்கு, கொழும்பு – 07 இல் இடம்பெறவுள்ளது.ஏற்கனவே பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் இவ்வருடம் கிழக்கு மாகாணக் கலாசாரத் திணைக்களத்தினால் “மாகாணமுதலமைச்சர் விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஓய்வு பெற்ற அதிபரும், சிறந்த கவியாற்றல் மிக்கவருமான இவர், மண்டூர், காரைதீவுப் பிரதேசங்களில்
மட்டுமல்லாது மாவட்ட, மாகாண மட்டங்களிலும் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலக்கிய, சமய, கலாசார
மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக அயராது உழைத்தவர். இவர் பெறும் அதியுயர் விருதாக இவ்விருது
கிடைப்பதையிட்டு காரைதீவு மற்றும் மண்டூர் மக்கள் மிக்க மகிழ்ச்சியடைவதோடு தங்கள் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்கின்றனர்.

தகவல்:-முத்துலிங்கம் ரமணீதரன்
Comments