What's new‎ > ‎

இரங்கற் செய்தி - அவுஸ்திரேலிய காரைதீவு ஒன்றியம் (AUSKAR)

posted Nov 13, 2011, 3:27 AM by Piratheeparajh Ratnasingam   [ updated Nov 14, 2011, 9:52 PM ]





ஓய்வு பெற்ற வளர்ந்தோர் கல்வி அதிகாரியும் முன்னை நாள் காரைதீவு கிராமாட்சி மன்ற தலைவரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினருமான இளையதம்பி விநாயகமூர்த்தி (சேர்மன்) அவர்களின் மறைவை ஒட்டி அவுஸ்திரேலிய காரைதீவு ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கிறது.

அன்னார் ஆசிரியர், அதிபர், வளர்ந்தோர் கல்வி அதிகாரி, கிராமாட்சிமன்ற தலைவர், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர், கூட்டுறவு சம்மேளனத்தலைவர் என்ற பல பரிமாணங்களினூடாக காரைதீவை மட்டும் அல்லஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கல்வி, சமூக, அரசியல் அபிவிருத்தி வளர்ச்சியில் மிகப்பாரிய பங்களிப்பை செய்திருந்தார்.

கடந்த காலங்களில் ஊரில் பாரிய சமுதாய, அரசியல்  மாற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதும் “விபுலபூரணன்” என்ற கெளரவப்பட்டம் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது அவரது அளப்பரிய பங்களிப்பை பறை சாற்றுகின்றது.

அரசியல் முதிர்வும், நீண்டகால சமுதாயம் தொடர்பான அறிவும் வாய்ந்த அன்னாரின் இழப்பு எமக்கு ஓர் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள், உற்றார் உறவினர், குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.


அவுஸ்திரேலிய காரைதீவு ஒன்றியம் (AUSKAR)
தலைவர்
அ. மகேந்திரன்

Comments