What's new‎ > ‎

இன்று வெசாக் தினம்

posted May 27, 2010, 12:57 AM by Suranuthan Sothiswaran

வெசாக் - மே மாத பெளர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை அகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும் இக்காலப் பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களைக் கொண்ட நாளாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.

1. சித்தார்த்த கெளதமர் லும்பினி (நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.

2. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.

3. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள்.

இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாக பெளத்தர்கள் நம்புகின்றனர்.


Comments