What's new‎ > ‎

Imran Premier League -2012 (Match Result)

posted Mar 24, 2012, 9:20 AM by Lavanyan Thiruchelvam

பிராந்தியத்தின் பிரபலமான 32 அணிகளை இணைத்து நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் இம்ரான் பிறிமியர் லீக் 20-20 சுற்றுத் தொடருக்காக மாளிகைக்காடு றியல்பவர் அணியினருக்கெதிராக இன்று நடைபெற்ற போட்டி ஓன்றில் காரைதீவூ விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய KSC மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.187 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாடிய றியல்பவர் அணியினர் வெறும் 59 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கட்டுக்களையூம் இழந்தனர்.அந்த வகையில் இப்போட்டியில் 127 ஓட்டங்களால் KSC வெற்றியீட்டிக்கொண்டது.அபாரமாக பந்துவீசிய சுலக்சன் வெறும் 13ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.




Info - Mr.L.Suresh (Secretary KSC)
Comments