What's new‎ > ‎

வீண் அவதூறுப்பிரச்சாரங்களை நம்பவேண்டாம்

posted Apr 29, 2010, 10:07 PM by Web Team   [ updated Apr 30, 2010, 2:49 AM ]
 
இது கடந்த 20-04-2010 அன்றும் எமது இணையத்தளத்தில் twitter மூலம் வெளிவிடப்பட்ட இலவசகக்கல்வியகம் தாக்கப்ட்ட செய்தி தொடர்பானது.

"காரைதீவு -5 பிரதேசத்தில் உள்ள இலவசக் கல்வியகம் ஒன்று இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது"

இந்த செய்தியானது அக்கல்வியக மாணவர்கள் மூலம்  எமக்கு கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே வெளிவிடப்பட்டது.

எமது பிரதேச மணவர்களுக்கு இலவசமாக சேவைநோக்குடன் கற்பிக்கும் இக்கல்வியகத்திற்கு நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும், இவ்வறான சேதங்களுக்கு நலன் விரும்பிகளின் உதவியைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கிலுமே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது .  

இது போன்று, முன்பு ஒரு தடவை பிளஸ் கல்வியகத்தின் உடமைகள் தாக்கப்பட்டபோதும் அது தொடர்பாக செய்தி பிரசுரித்திருந்தோம்.

மேலும், எமது இணையத்தளமானது கண்ணியமான கல்விகற்ற இளம் சமுதயாத்தினால் தமது சொந்த அர்ப்பணிப்புடன் நல்நோக்கோடு நடாத்தப்பட்டு வருவதும், ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்களோ அல்லது அவ்வாறான செய்திகளையோ பிரசுரிப்தில்லை என்பதையும் எம்முடன் ரம்பகாலத்திலிருந்து இணைந்துள்ள அனபர்களுக்குத் தெரியும். 

அத்துடன் கடந்த 2 வருடங்களாக எமது செயற்பாடுகளை  இனம்கண்டு காரைதீவிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் கோவில்கள் மற்றும் ஏனைய பொது நிறுவனங்கள் எம்ம்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள் 

எனினும்,  ஊர் பிரமுகர்கள்  சிலர் எம்மை தவறாக விளங்கி  எமது இணையத்தளத்தினதும், எமது இணைய ஆசிரியர்களினதும் நன்மதிப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், நாம் மேற்குறிப்பிட்ட கல்வியகத்துக்கும் அதனை சார்ந்தவர்களுக்கும் எதிராக செயற்படுவதாக, பொய்யான விசமப்பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள் .

 மேலும் எமது இணையத்தளத்தின் பெயரானது .org என முடிவடையும் என்பது கூட பலருக்கு தெரியாததாக உள்ளது.

எனவே நாம் அறுதியாகவும் உறுதியாகவும் கூறுவது யாதெனில் …..

  • எமது இணையத்தளத்துக்கும் facebookல் பொய்யான பெயரொன்றில் மறைத்துள்ளவருக்கும் எதுவித தொடர்புகளோ/கணக்குளோ இல்லை.
  • எமது இணையத்தளத்துக்கும் மேற்குறிப்பிட்ட இலவசக் கல்வியகத்துடனோ அல்லது அதனை சார்ந்தவர்களுனோ எந்தவொரு தெடர்பும் இல்லை
  • எமது facebook கணக்கு http://www.facebook.com/karaitivu
  • எமது twitter கணக்கு http://twitter.com/karaitivu
  • எமது இணைய முகவரி http://www.karaitivu.org/
  • எமது இயைத்தளத்தின் நோக்கம் எமது காரைதீவு கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதும், எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும்.
  • மிகமுக்கியமாக, எமது இணையத்தளமானது தவறுகளை தட்டிக்கேட்பதற்காக அமைக்கப்பட்டதல்ல என்பதையும் அவ்வாறான எந்தவொரு காரியத்திலும் இறங்குவதாக எண்ணமில்லை என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் (முக்கிய குறிப்பு : அதற்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கென சட்டங்களும் அதை நிறைவேற்றுவதற்கான பல்வேறுபட்ட திணைக்களங்களும் உண்டு)

நன்றிகளுடன்
இணைய ஆசிரியர்கள் குழு
www.karaitivu.org                                                
தொடர்புகளுக்கு : info@karaitivu.org

Comments