What's new‎ > ‎

இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கு நிறைவு

posted Aug 5, 2011, 11:07 AM by Suranuthan Sothiswaran
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியமானது கடந்த 18 வருட காலமாக காரைதீவு கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் மட்டுமன்றி ஏனைய அயல் கிராமங்களின் கல்வி வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்து வருவது யாவரும் அறிந்த விடயமே …

அந்த வகையில் இம் முறையும் 5ம் தர புலமைப்பரிசில் கருத்தரங்கை எந்தவித நிறுவனங்களின் உதவியும் இன்றி ஒன்றிய உறுப்பினர்களிடம் இருந்து அறவிடப்பட்ட சந்தாப் பணம் மூலம் பிரபல்யமான ஆசிரியரைக் கொண்டு முற்றிலும் இலவசமாக விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இன்று நடாத்தியுள்ளது. இக் கருத்தரங்குக்கு வீரமுனை,அட்டப்பளம்,திராய்க்கேணி போன்ற பிரதேசங்களில் இருந்தும் மொத்தமாக 120 மாணவர்கள் வந்து கலந்து கொண்டமை சிறப்பிற்குரியதாகும்.

இதனைத் தொடர்ந்து 05,06,07,08 ம் திகதிகளில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவதற்கும் ஒன்றிய உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் 








பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம்
காரைதீவு


தகவல் -  செ.கஜேந்திரன்
Comments