What's new‎ > ‎

இலவசக் கருத்தரங்கில் பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம் மாணவர்களால் பாராட்டப்பட்டது.

posted Aug 10, 2011, 12:14 AM by Suranuthan Sothiswaran
07.08.2011 அன்று நடைபெற்ற க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இலவச அரசியல் விஞ்ஞானப் பாடக் கருத்தரங்கில் ஏறத்தாள 300 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். காரைதீவுப் பிரதேசத்தில் இருந்து மட்டுமன்றி திருக்கோவில், தம்பிலுவில், வினாயகபுரம், அக்கரைப்பற்று, பாலமுனை,அட்டப்பள்ளம்,சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, நிந்தவூர்;,சாய்ந்தமருது, கல்முனை , மட்டக்களப்பு……. போன்ற பல பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் வருகை தந்து இவ் இலவசக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இக் கருத்தரங்கை திருவாளர் டேவிட் ஆசிரியர் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தியிருந்தார். இக் கருத்தரங்குக்கு வருகை தந்த மாணவர்களின் நலங்கருதி பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தால் சிற்றுண்டிச் சாலை ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இக் கருத்தரங்கின் இறுதியில் மாணவர்கள் தங்கள் நன்றியை தெரிவிக்கும் போது “இக் கருத்தரங்கு தமக்கு பூரண பயனளித்ததாகவும் மேலும் இது இலவசக் கருத்தரங்கு என்ற படியால் பல ஏழை மாணவர்கள் பயன்பெற முடிந்ததாகவும் கூறியதோடு காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம் மேலும் வளர வேண்டும் என வாழ்த்தி இவ் இலவசக் கருத்தரங்கை ஒழுங்கு செய்து தந்த பல்கலைக்கழக மாணவர்களையும் மனமாற பாராட்டுவதாகவும் கூறியிருந்தனர்”.

மேலும் இக் கருத்தரங்கின் போது நடாத்தப்பட்ட மாதிரி பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
 









தகவல் :
செ.கஜேந்திரன்
 
   

Comments