What's new‎ > ‎

இலங்கை வங்கியின் லீசிங் அடிப்படையிலான முச்சக்கரவண்டி வழங்கும் வைபவம்

posted Jan 3, 2012, 5:01 AM by Suranuthan Sothiswaran
இலங்கை வங்கியின் லீசிங் அடிப்படையிலான வாகனக்கொள்வனவுத்திட்டத்தின் கீழ் காரைதீவு இலங்கை வங்கி வாடிக்கையாளர் நால்வருக்கு முச்சக்கரவண்டி வழங்கும் வைபவம் புதுவருடதினத்தன்னு நடைபெற்றது. இவ்வைபவத்தில் இலங்கை வங்கி அம்பாரை பிராந்திய முகாமையாளர் ஜனாப். எஸ்.எம்.அப்துல்லா நான்குபயனாளிகளுக்கு சம்பிரதாயபூர்வமாக சாவிகளை வழங்கி வைப்பதனையும், நிந்தவூர் இலங்கை வங்கி கிளை முகாமையாளர் ஜனாப். எம்.ஏ.எம். அப்துல் நசீர் , காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி. பா. விவேகானந்தராஜா, நிந்தவூர் இலங்கை வங்கி கிளை உதவி முகாமையாளர் ஜனாப். எம்.எல்.எம். பாறூக் மற்றும் உத்தியோகத்தர்களையும் படத்தில் காணலாம்   




Comments