What's new‎ > ‎

Happy Father's Day (17th june 2012)

posted Jun 17, 2012, 1:58 AM by Lavanyan Thiruchelvam   [ updated Jun 17, 2012, 2:11 AM ]


அப்பா !!
ஆம் உலகில் இருக்கும் உன்னதமான உறவுகளில் ஒப்பற்ற ஒன்று! 
தாய் பத்து மாசம்! ஆம் கடவுள் அவளுக்கு அளித்த ஒப்பற்ற பரிசு! 
ஆனால் தந்தை உயிர் கொடுக்கும் கடவுள்! நாம் நினைத்ததை பெற்று தருவான்! 
தன் இன்பத்தை பெரிதாக கொள்ளாமல் தன் பிள்ளையின் நன்மையை கருதுவான்! 
தன் மார் மீது படுக்க வைத்து தன் தூக்கம் தொலைத்து நம்மை தூங்க செய்வான்! 
நாம் நல்ல உடை உடுத்த அவன் கந்தை உடை புரிவான்! கல் வேலை செய்வான்! 
அம்மா போல் உணர்சிகளை கொட்டாமல் உள்ளத்தில் பாசத்தை கொண்டிருப்பான்! 
நீ உயர பறக்க அவன் தரையில் உதிரம் உருக பறப்பான்! தன்னலமற்ற தந்தையாக!!! 

நான் பார்த்து பலர் சொல்வார்கள் அம்மா பிடிக்கும் என்று! ஆம்! எனக்கும் தான்! 
ஆனால்... 
அம்மா இதயம் என்றால்!!! அப்பா உயிர்!!! 
உணர்ந்து பாருங்கள் அப்பாவின் பாசத்தை!!! 
உள்ளம் உருகுவது புரியும்!!! 
அப்பாவின் அன்பு சூரியனால் மறைக்கப்பட்ட 
நிலவொளியை போன்றது 
மென்மையானது எல்லோரும் அறியும் 
நேரம் வருகையில்
நீங்கள் வாழக் கற்றுக்கொடுத்ததில்லை.. 
வாழ்ந்து காட்டினீர்கள்.. 
அப்பா !!!
புனிதமான இன்நாளில் அனைத்து தந்தையர்களுக்கும் காரைதீவூ.ஓர்க் தன் தந்தையர் தினநல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
HAPPY FATHER'S DAY......
Comments