What's new‎ > ‎

Diamond Jubilee - Nehru Community Center

posted Dec 26, 2009, 11:56 PM by Prasath Mendis Appu   [ updated Dec 27, 2009, 5:00 PM by Suranuthan Sothiswaran ]
நேரு சனசமூக நிலையத்தின் 60 வது ஆண்டு

வைரவிழா சிறப்பு நிகழ்வு - 2009

நேரு சனசமூக நிலையம் தனது வைர விழா சிறப்பு நிகழ்வினை எதிர்வரும் 27.12.2009 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நேரு சனசமூக நிலையத்தில் நடாத்தவிருக்கின்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக நேரு சனசமூக நிலையத்தின் ஸ்தாபக செயலாளர் திரு க. சின்னராசா J.P  ( ஓய்வுபெற்ற மீன்பிடி பரிசோதகர்) அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், காரைதீவுப் பிரதேச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நேரு சனசமூக நிலையத்தின் முன்னைநாள் தலைவர்கள், உபதலைவர்கள், செயலாளர்கள், உப செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோரும் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் நேரு சனசமூக நிலையத்தின் புதிய கட்டிடத் திறப்புவிழா மற்றும் கட்டிட நிருமாணிப்புக்கு நிதியுதவியினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் அமரர். கனகசபை பத்மநாதன் அவர்களின் புகைப்படத்தினைத் திறந்துவைத்தலும், மலர்மாலை அணிவித்தலும் இடம்பெறவிருக்கின்றது

வைரவிழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலைமட்டப் போட்டிகள் மற்றும் சனசமூக நிலையங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி என்பவற்றில் வெற்றியீட்டியோருக்கான வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் என்பனவும் வழங்கப்படவிருக்கின்றன.

வைரவிழாவினை ஒட்டி “மணிமகுடம்” என்ற சிறப்புமலரும் “நினைவுச் சின்னம்” மும் இந் நிகழ்வில் வெளியிடப்படவிருக்கின்றது.

எனவே இந்நிகழ்விற்கு வருகைதந்து இந் நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு நேரு சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் காரைதீவு வாழ் மக்களை அன்புடன் அழைக்கின்றோம்.

வைரவிழா சிறப்பு நிகழ்வு நிறைவின் பின்னர் “நிலைய இரவு” உம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தலைவர்
நேரு சனசமூக நிலையம்
காரைதீவு
பதிவிலக்கம் : AM/CC/153


தகவல்: Mr. Muthulingam Ramaneetharan

Comments