What's new‎ > ‎

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கல் திட்டம் - 2010

posted Mar 1, 2010, 9:26 AM by Premakumar Nadarajah
சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கல் திட்டம் - 2010

எமது அமைப்பானது தேசிய நம்பிக்கை நிதியத்துடன்(NDTF) இணைந்து ,அவர்களின் நிதி உதவியுடன் மேற்படி செயற்திட்டத்தை 2009ம் ஆண்டில் இருந்து, எமது காரைதீவு பிரதேசத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

 சென்ற வருடத்தைப் போன்று இவ் வருடமும் எமது அமைப்பானது இச் செயற்திட்டத்திற்காக ரூபா 5,000,000.00 இற்கான ஒப்பந்தத்தை NDTF  உடன் 2010.02.26.ம் திகதி அன்று செய்துள்ளது.

இத் திட்டத்தின் 1ம் கட்ட சுயதொழில்  முயற்சியாளர்களுக்கு நிதி வழங்கும் வைபவம் SEDO தலைமை  காரியாலயத்தில்  நடைபெற்றது இவ்வைபவத்தில்   காரைதீவு பிரதேச செயலாளர், ஒய்வு பெற்ற கிராம சேவையாளர், நிறுவனத்தின் இணைப்பாளர் போன்றோர் கலந்த சிறப்பித்தனர்.

இடம்  - SEDO தலைமைக்  காரியாலயம் , தேசிகர் வீதி, காரைதீவு -12
காலம் -  01.03.2010.
நேரம் -  3.30 பி.ப.

தேசிய நம்பிக்கை நிதியத்துடன் SEDO நிறுவனம் ஒப்பந்தம்



Comments