What's new‎ > ‎

சுவாமி விபுலானந்தரின் பிறந்தநாள் நிகழ்வுகள்

posted Mar 27, 2012, 7:43 AM by Suranuthan Sothiswaran   [ updated Mar 27, 2012, 10:29 AM ]
சுவாமி விபுலானந்தரின் பிறந்தநாள் நிகழ்வுகள் அன்னாரின் பிறந்த இல்லத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்டபுகைப்படங்கள்


சுவாமி விபுலாநந்தரின் 120 வது ஜனன தினம் மிகவும் எளிமையாக அவர் பிறந்த இல்லத்தில்  சுவாமி விபுலாநந்தா பணிமன்றத்தின் ஏற்பாட்டில் 27.03.2012 காலை 09.00 மணியளவில் நடைபெற்றது. விபுலானந்த மணிமண்டப தலைவர் திரு. சகாதேவராஜா (உதவிக்கல்விப்பணிப்பானர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  சுவாமி விபுலானந்தரின் பேத்தி திருமதி. விஜயலெட்சமி புவனனராஜா, இராமகிருஷ்ணமிசன் பற்றாளாகளான திரு. வெ.ஜெகநாதன் (ஓய்வுநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர், திரு. த.அருணாசலம் (ஓய்வுநிலை ஆசிரியர்)  மற்றும் த. சச்சிதானனந்தன் (ஓய்வுநிலை கூட்டுறவு பரிசோதகர்) nமுதலானோரும் கலந்து சிறப்பி;த்தனர் ) 

மேற்படி நிகழ்வில் எமது இணையத்தளம் சார்பாக எமது சிரேஷ்ட இணையக்குழு உறுப்பினரும் கொழும்பு மருத்துவபீட மாணவரும் கவிஞருமான ந. அகிலன் (காரையம்சன்) கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சாயி பாலர்பாடசாலை  மாணவர்கள், விபுலாநந்தா மொண்டிசெரி மாணவர்கள் மற்றும் காiராதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். 

மேலும் இந் நிகழ்வின் போது பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தால் சுவாமி விபுலாநந்தரின் 120 வது பிறந்த தின நிகழ்வை ஒட்டிய பாமாலை ஒன்றும் இத் தருணத்தில் பிரசுரிக்கப்பட்டது. அத்துடன் காரைதீவு கமுஃசண்முகா மகா வித்தியாலய சங்கீத மாணவர்களும் மற்றும் ஆசிரியை   திருமதி.புவனேஸ்வரி-ஜெயகணேஸ் குழுவினரால் பாடல் இசைக்கப்பட்டது. 


இறுதியாக செயலாளர் க.கணேசராஜா அவர்களின் நன்றியுரையுடன் இன் நிகழ்வு நிறைவுற்றது.  

புகைப்படத்தொகுப்பினை பார்வையிட முடியாவிடின் இங்கே அழுத்தவும்

Information / photos:Mr.N.Ahilan (Karaitivu.org Senior Webteam)
Information / Photos:S.Kajendran 

Comments