What's new‎ > ‎

சுவாமி நடராஜனந்தா அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்

posted Nov 28, 2009, 9:18 PM by Prasath Mendis Appu   [ updated Nov 28, 2009, 9:26 PM ]


1903 - நவம்பர் 29ஆந் திகதி சுவாமியின் அவதாரம் இடம்:- மட்டக்களப்பின் காரைதீவு. தந்தை:- கதிர்காமத்தம்பி விதானையார். தாய்:- மயிலம்மா. இளமைப்பெயர்:- சீனிவாசகம். 1909 - ஆரம்பக்கல்வி:- காரைதீவு ஆண்கள் பாடசாலை, கல்முனை அர்ச் மரியாள் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. 1919 - கேம்பிரிச் சீனியர் பரீட்சையில் சித்தி பெற்றமை. இலண்டன் மெட்ரிக்குலேசன் சித்தி பெற்றமை. 1920 - ஆங்கில ஆசிரியர் தராதரப்பத்திரத்தில் சித்தி பெற்றமை. ஆசிரியர் பணியை ஏற்றமை. 1921 - திருமலை இந்துக்கல்லூரி, யாழ்ஃவைத்தீஸ்வராக்கல்லூரி, மட்ஃசிவானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரிய சேவை புரிந்தமை. 1930 - நீர்ப்பாசன பகுதியில் பொறியியல் உதவியாளர் பணி. 1932 - சுவாமி விபுலானந்தரின் நெருங்கிய உறவு கிடைத்தமை. 1935 - பதவிகளைத் துறந்து துறவு பூண ஆயத்தம். ‘நிர்வேத சைதன்யர்’ எனும் பிரம்மசரியத்துடன் துறவறம் புகுந்து பயிற்சியை பெற்றமை. 1937 - பாரத நாட்டிலுள்ள இ.கி.சங்க ஸ்தாபனங்களில் கடமை புரிந்தமை. 1940 - 02ஆம் உலக மகாயுத்த காலத்தில் பாதிப்புற்றோருக்கு உதவுவதற்கு பர்மாவின் ரங்கூனில் சேவை. 1943 - கல்கத்தா இ.கி.மி தலைமைப்பீடத்தில் சுவாமி அகண்டானந்தரைக் குழுவாகக் கொண்டு சன்னியாச தீட்சை பெற்றார. அப்போது சுவாமி ‘நடராஜானந்தர்’ எனும் திருநாமம் பெற்றார். 1945 - இலங்கையிலுள்ள இ.கி.மி. பாடசாலைகளின் முகாமையாளராகப் பணியாற்றினார். 1950 - 26 மிசன் பாடசாலைகளின் முகாமையாளராக மட்ஃஇ.கி.மி மடாலயத்திலிருந்து கொண்டு சேவை. 1962 - அரசாங்கம் இ.கி.மிபாடசாலைகளை பொறுப்பேற்றும் ஆனைப்பந்தி மகளிர் இல்லம், கல்லடி உப்போடை சிறுவர் இல்லம், காரைதீவு சிறுமியர் இல்லம் ஆகிய 03 இல்லங்களும் பராமரித்து வந்தமை. 1967 - 1967.03.18, அதிகாலை 4.45 மணியளவில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமகம்சரின் திருவுருவப்படத்தை மார்பில் தாங்கிய வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.


நன்றி திரு.விரி.சகாதேவராஜா
Comments