பட்டயம் வழங்கும் நிகழ்வு

posted Oct 29, 2012, 11:21 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 29, 2012, 12:33 PM ]

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் முன்முனைப்புடனும் காரைதீவிலுள்ள அனைத்து சமய சமூக கலாசார மற்றும் இளைஞர் அமைப்புக்களினதும் பங்களிப்புடனும் நடைபெறவுள்ள வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன தின நிகழ்வையொட்டிய இரத பவனியும் இந்து சமய எழுச்சி மாநாடும் எனும் மகுடமிடப்பட்ட பெருநிகழ்விற்கான அழைப்பிதழ் பட்டயம் வழங்கும் நிகழ்வானது காரைதீவு மண்ணின் முதன்மை பிரஜை கௌரவ தவிசாளர் செல்லையா இராசையா அவர்கள் உட்டபட காரைதீவு மண்ணின் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப்பணிமன்றத்தின் தலைவர் திரு.VT.சகாதேவராஜா அவர்களால் பட்டயம் வாசிக்கப்பட ஊர்ப்பிரமுகர்களால் இராம கிருஷ்ண சங்கத்துறவிகளிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் எமது மண்ணைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கௌரவ. இரா.துரைரெட்ணம் அவர்களும் கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வினையடுத்து காரைதீவு சாரதா சிறுமியரில்ல மாணவிகள் வழங்கிய நடன விருந்திலும்; கல்லடி இ.கி.மிசன் வழங்கிய மதிய உணவு விருந்திலும் எமது ஊர்ப்பிரமுகர்கள் கலந்துகொண்டனர்


Comments