What's new‎ > ‎

சிரமதான நிகழ்வு

posted Oct 31, 2010, 9:34 PM by Web Team
காரைதீவு பிரதேசத்தில் விபுலானந்தா மத்திய கல்லூரியின் திண்மக்கழிவு முகாமைத்துவ குழுவும் டைனமிக் விளையாட்டுக்கழகமும் இணைந்து சிரமதான நிகழ்வொன்றை மேற்கொண்டன. காரைதீவு பிரதேசத்தில் தேசிகர் வீதியும் மத்திய வீதியும் சந்திக்கும் இடத்தில் பெருமளவு குப்பை காணப்பட்டது. டைனமிக் விளையாட்டுக்கழகம்  விபுலானந்தா மத்திய கல்லூரியின் திண்மக்கழிவு முகாமைத்துவ குழுவூடாக இப்பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுகளை மேற்கொண்டுவரும்  வளங்கள் அபிவிருத்தி ஆலோசனை நிறுவனத்திடம் அறிவித்தனர். அந்நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.ந.ஜீவராஜாவிடம் அறிவித்து அவரின் உத்தரவுக்கமைய கழிவகற்றும் வண்டியை உடயே அனுப்பி இந்தக்குப்பை அகற்றப்பட்டது.





Comments